

முஸ்லிம் வீரர் மட்டுமே சமூல வலைதளங்களில் குறிவைக்கப்படுகிறார் என்று இந்திய வீரர் முகமது ஷமிக்கு ஆதரவாக ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி கருத்துத் தெரிவித்துள்ளார்.
துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதுவரை 12 முறை உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் மோதிய இந்திய அணி முதல் தோல்வியைச் சந்தி்த்தது.
இந்த தோல்வியைத் தாங்க முடியாத ரசிகர்கள், நேற்றைய ஆட்டத்தில் மோசமாகப் பந்துவீசிய இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியை அவதூறாக சமூக ஊகடங்களில் விமர்சித்தனர். முகமது ஷமி குறித்தும் அவரின்குடும்பத்தினர், தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மோசமாக ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அவமானப்படுத்தினர்.
ஷமியை டேக் செய்து தொடர்ந்து ட்ரால் செய்து வருகின்றனர். மேலும், விராட் கோலியின் கேப்டன்ஷி குறித்தும் மோசமாக விமர்சித்து வருகின்றனர்.
முகமது ஷமிக்கு ஆதரவாக ஏன் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம், பிசிசிஐ என யாரும் கேள்வி கேட்கவில்லை, ஆதரவாக நிற்கவில்லை என தேசிய மாநாட்டுக்க ட்சித் தலைவர் உமர் அப்துல்லா ேகள்வி எழுப்பியிருந்தார்.
அதுமட்டுமல்லாமல், பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியில் விளையாடிய 11 பேரில் முகமது ஷமியும் ஒருவர். முகமது ஷமி மட்டும் தனியாக விளையாடவில்லை. உங்கள் சக வீரர் ஒருவர் சமூக வலைதளத்தில் மோசமாக அறுவறுக்கத்தக்க வார்த்தைகளால் ட்ரால் செய்யப்படும்போது, அவருக்கு ஆதவாரக நிற்காமல், கறுப்பின மக்களுக்கு ஆதரவாக இந்திய அணியினர் அனைவரும் மைதானத்தில் முழங்கால் இட்டு ஆதரவு தெரிவித்தது எந்தவிதத்திலும் பொருட்படுத்த முடியாது” எனத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து முன்னாள்வீரர்கள் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், இர்பான் பதான் ஆகியோர் ஷமிக்கு ஆதரவாக சமூக வலைதளம் மூலம் ஆதரவு தெரிவித்தனர்
இந்நிலையில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசியும் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் நிருபர்களுக்கு அளி்த்த பேட்டியில் “பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இ்்ந்தியஅணி தோல்வி அடைந்தமைக்கு சமூகவலைதளங்களில் முகமது ஷமி ட்ரால் செய்யப்பட்டு குறிவைக்கப்பட்டார்.
இந்த செயல்பாடு, முஸ்லிம்கள் மீதான வெறுப்பு, தீவிரமனப்போக்கு ஆகியவற்றையே குறிக்கிறது. கிரிக்கெட் என்பது விளையாட்டு அதில் வெற்றியும் பெறலாம் தோல்வியும் கிடைக்கும். அணியில் 11 வீரர்கள் விளையாடியபோது, ஏன் ஒரே ஒரு முஸ்லிம் வீரர் மட்டும் குறிவைக்கப்பட்டார். இதை பாஜக கண்டிக்குமா. இந்தியா, பாகிஸ்தான் போட்டி நடத்தக்கூடாது என நான் ஏற்கெனவே கூறியிருந்தேன், இந்தப் போட்டி நடந்திருக்கக் கூடாது” எனத் தெரிவித்தார்