

கொல்கத்தாவில் கடந்த 19ம் தேதி நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண அமிதாப் பச்சன் தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.30 லட்சம் செலவு செய்ததாக மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இந்த போட்டியின் போது அமிதாப் தேசிய கீதம் பாட ரூ.4 கோடி வாங்கியதாக எழுந்த புகாரையும் கங்குலி திட்டவட்டமாக மறுத்தார்.
டி 20 உலகக் கோப்பையில் கடந்த 19ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் இந்திய தேசிய கீதத்தை பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பாடினார். தொடர்ந்து போட்டி முடியும் வரை சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுடன் அமர்ந்து போட்டியை ரசித்தார் அமிதாப் பச்சன்.
இந்நிலையில் தேசிய கீதத்தை பாடுவதற்காக அமிதாப் பச்சன் ரூ.4 கோடி வாங்கியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதையடுத்து அமிதாப் பச்சனுக்கு எதிராக சமூக வலைத் தளங்களில் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்தனர். அவரது தேசபக்தி பற்றி கேள்வி எழுப்பிய அவர்கள் கடுமையாக குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில் மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவர் கங்குலி, அமிதாப் பச்சன் பற்றி எழுந்த சர்ச்சைகளை மறுத்துள்ளார். இது குறித்து கங்குலி கூறிய தாவது:
"அமிதாப்பச்சன் தனிச்சிறப்பு மிக்க நபர். நான் என்றென்றும் அவருக்கு கடமைப்பட்டிருக் கிறேன். நிகழ்ச்சிக்காக தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.30 லட்சம் செலவு செய்யும் நபரை உங்களால், கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?. விமான டிக்கெட், ஹோட்டல் ரசீது, போட்டிக் கான டிக்கெட் போன்றவற்றை தனது சொந்த செலவில் அமிதாப் முன்பதிவு செய்திருந்தார். சிறிய தொகையை பெற்றுக்கொள்ளு மாறு நான் அமிதாப் பச்சனிடம் கெஞ்சினேன். எனது நேசத்தை வெளிப்படுத்த இதை நான் செய்கி றேன். இதில் பணம் என்ற கேள்வியே இல்லை என்று என்னிடம் கூறி அமிதாப் பச்சன் மறுத்துவிட்டார்". இவ்வாறு கங்குலி கூறினார்.