Last Updated : 25 Oct, 2021 11:17 AM

 

Published : 25 Oct 2021 11:17 AM
Last Updated : 25 Oct 2021 11:17 AM

இந்திய அணியை வென்றுவிட்டதால் உச்சகட்ட மகிழ்ச்சிக்குச் செல்லாதீர்கள்: பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் ஆஸம் அறிவுரை

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் | படம் உதவிட்விட்டர்

துபாய்


இ்ந்தியஅணியை வென்றுவிட்டதால் உச்ச கட்ட மகிழ்ச்சிக்கு யாரும் செல்ல வேண்டாம். நம்முடைய இலக்கு உலகக் கோப்பை என்று பாகிஸ்தான் அணியினருக்கு கேப்டன் பாபர் ஆஸம் அறிவுறுத்தியுள்ளார்.

துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.

கடந்த 1992ம் ஆண்டு சிட்னியில் விளையாடியதிலிருந்து 50 ஓவர்கள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் 12 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் தோல்வி அடைந்திருந்திருந்தது. ஆனால், பாகிஸ்தான் அணி முதல் முறையாக நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியை வென்று தனது தாகத்தை தீர்த்துக் கொண்டது.

இந்நிலையில் வெற்றிக்குப்பின் பாகிஸ்தான் வீரர்களிடம் கேப்டன் பாபர் ஆஸம் பேசிய வீடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனதுட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் கேப்டன் பாபர் ஆஸம் பேசுகையில் “ அணி வீரர்களை, இந்த வெற்றி அணியில் உள்ள எந்த தனிஒரு வீரரால் கிடைக்கவில்லை.

நாம் முழுமையாக போராடியதால், சிறப்பாகச் செயல்பட்டதால் கிடைத்த வெற்றி. இதை இப்படியே விட்டுவிட்டு செல்லக்கூடாது. இது நமக்குத் தொடக்கம்தான், இந்திய அணிைய வீழ்த்திவிட்டோம் என உச்ச கட்ட மகிழ்ச்சிக்கு செல்லாதீர்கள். நம்முடைய நோக்கம் டி20 உலகக் கோப்பையை வெல்வதாக இருக்க வேண்டும். நாம் எப்போதும் நிலைத்தன்மையில்லாமல் விளையாடுவதை பழக்கமாக வைத்துள்ளோம்.

அதை இந்த முறை செய்துவிடக்கூடாது. இந்த பழக்கத்தை மாற்ற வேண்டும், நம்புவோம். இந்தியாவுக்கு எதிரான வெற்றிக்கு அனைவருக்கும் வாழ்த்துகள் ஒருபோதும் ஓய்வாகஇருக்கக்கூடாது, 100 சதவீத உழைப்பை வழங்க வேண்டும். அதிகமான உற்சாகத்துக்குச் செல்லாதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே போட்டி முடிந்தபின் கேப்டன் பாபர் ஆஸம் நிருபர்களிடம் கூறுகையில் “இந்திய அணியை வீழ்த்தியது எளிதானது அல்ல. இந்த வெற்றியிலிருந்து எங்களுக்கு நம்பிக்கை பிறந்துள்ளது, இந்த வெற்றியோடு இன்னும் நீண்டகாலம் தொடர வேண்டும். நாங்கள் சரியாகத் தயாராகினோம், எங்கள் வரலாற்றை மனதில் வைத்து தயாராகினோம்.

தரமான பயிற்சிக்கான நேரம், பயிற்சிஆட்டங்கள், உள்நாட்டுப் போட்டிகள் தேவைப்பட்டன. இவைதான் எங்களுக்கு நம்பிக்கையளித்தன. இது அணியினரின் ஒட்டுமொத்த உழைப்புக்கு கிடைத்த வெற்றி. தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தியது எங்களுக்கு உதவியாக இருந்தது. நாங்கள் போட்ட திட்டத்தை சரியாகச் செயல்படுத்தினோம், வெற்றி கிடைத்தது. சேஸிங் செய்யும்போது, ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறியதால், எங்களால் பேட்டிங் செய்ய எளிதாக இருந்தது,கடைசி வரை விளையாட முடிந்தது” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x