Published : 24 Oct 2021 03:49 PM
Last Updated : 24 Oct 2021 03:49 PM

தந்திரம் முக்கியம்; இந்திய வீரர்கள் தவறு செய்யாவிட்டால், பாகிஸ்தான் வெல்வது கடினம்: பாக். முன்னாள் கேப்டன் வெளிப்படை

கோப்புப்படம்

லாகூர்

பாகிஸ்தான் அணி எப்படி வேண்டுமானாலும் விளையாடட்டும். அது பிரச்சினையில்லை. இந்திய வீரர்கள் தவறுசெய்யவில்லை என்றால் பாகிஸ்தான் அணியால் வெல்ல முடியாது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் முதல் ஆட்டத்தில் இந்திய அணியும், பாகிஸ்தானும் மோதுகின்றன. இரு அணிகளும் கடந்த 2019ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிக்குப்பின் மீண்டும் மோதுகின்றன என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், டி20மற்றும் 50ஓவர்கள் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் வென்றதில்லை என்ற வரலாறு

தொடர்வதால் இன்றைய ஆட்டம் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை உலகக் கோப்பைப் போட்டியில் 12 முறை இந்திய அணியை எதிர்கொண்டு அனைத்திலும் பாகிஸ்தான் தோல்வி அடைந்துள்ளது.

ஆதலால், இந்தபோட்டியில் வென்று வரலாற்றை திருத்தும் முயற்சியில் பாபர் ஆஸம்தலைமையிலான பாகிஸ்தான் அணி களமிறங்கும். இதனிடையே பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப் பாகிஸ்தான் வெல்வதற்கு இந்திய அணி தவறு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

கலீஜ் டைம்ஸ் நாளேட்டுக்கு ரஷித் லத்தீப் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

என்னைப் பொறுத்தவரை இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி எப்படி வேண்டுமானாலும் விளையாடட்டும், எவ்வாறு விளையாடுகிறார்கள் என்பதும் முக்கியமல்ல. ஆனால், இந்திய வீரர்கள் தவறு ஏதும் செய்யாமல் இருந்தால், பாகிஸ்தான் அணியால் வெல்வது கடினம்.

நான் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்தபோது, எதிரணி ஏதேனும் தவறு செய்வதற்கு அதிகமாகத் தூண்டுவேன், முயற்சிப்பேன். அதேசமயம் எங்கள் பணியையும் சரியாகச் செய்யவேண்டும், அதேநேரத்தில் எதிரணி வீரர்களையும் தவறு செய்ய வைக்க வேண்டும். இது தொழில்நுட்பமும் அல்ல திறமையும் அல்ல. இது தந்திரம். உங்கள் தந்திரத்தை சரியான வழியில் செயல்படுத்த வேண்டும், அவ்வாறு செயல்படுத்தினால், எதிரணியினர் தவறுசெய்வார்கள்.

விராட் கோலி டாஸ் வென்றால் என்ன செய்வார் என்று நமக்குத் தெரியும், எந்தெந்த வீரர்களுடன் களமிறங்குவார் என்பது தெரியும். சூர்யகுமார் அல்லது இஷான் கிஷனுடன் விளையாடப் போகிறாரா. எந்த சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து கோலி விளையாடப் போகிறார் என்பதையும் கவனிக்க வேண்டும். வருண் சக்ரவர்த்தி, அஸ்வின், ஜடேஜா ஆகியோர் யார் வரப்போகிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டும். சரியான வீரர்களைத் தேர்வு செய்வதில் கேப்டன் தவறு செய்ய வாய்ப்புண்டு. ஏனென்றால் உங்களுக்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

கடந்த கால ரெக்கார்டைப் பார்த்தால், இந்தியாதான் உலகக் கோப்பைப் போட்டிகள் அனைத்திலும் வென்றது. ஒவ்வொரு உலகக் கோப்பைப் போட்டியின்போதும், பாகிஸ்தானில் இருக்கும் நாம் , இந்த முறை வெல்வோம் என்று தொடர்ந்து இதுபோன்றுதான் பேசி வருகிறோம். பாகிஸ்தான்அணி நிச்சயம் இந்த முறை வெல்லும் என நம்புகிறேன்

இவ்வாறு லத்தீப் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x