

2022ம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடரில் கூடுதலாக 2 அணிகளைச் சேர்ப்பதற்கான ஏலம் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் நிலையில் இரு அணிகளை வாங்குவதற்கு பல்ேவறு நிறுவனங்களுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றன.
ஐரோப்பிய கால்பந்தின் புகழ்பெற்ற மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பின் உரிமையாளர்களில் ஒருவரும் ஐபிஎல் தொடரில் ஒரு அணியை வாங்குவதற்கு தீவிரமாக இறங்கியுள்ளார் என்றுதகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் 25-ம் தேதி நடக்கும் இரு அணிகளுக்கான ஏலத்தில் அதானி குழுமம், அகமதாபாத்தைச் சேர்ந்த ஒருகட்டுமான நிறுவனம், சஞ்சீவ் கோயங்காவின் ஆர்பிஎஸ்ஜி குழுமம், நவின் ஜிண்டாலின் ஜின்டால் ஸ்டீல்,(டெல்லி கேபிடல்ஸ்), அரபி்ந்தோ ஃபார்மா, இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம், பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், ரன்பிர் மேலும் சில தனியார் நிறுவனங்கள் என 22 நிறுவனங்கள் ஆர்வமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஏலத்தில் பங்கேற்கவரும் நிறுவனங்களின் கடந்த 3 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் விற்று முதல்(டர்ன் ஓவர்) ரூ.2500 கோடிக்கு குறையாமல் இருப்பவர்கள்தான் ஏலத்தில் பங்கேற்க முடியும். ஒவ்வொரு அணியின் அடிப்படை விலையும் ரூ.2 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வரும் 25ம் தேதி நடக்கும் ஏலத்தில், அகமதாபாத், கட்டாக், தர்மசாலா, குவஹாட்டி, இந்துர், லக்னோ ஆகிய நகரங்களை மையமாக வைத்து அணிகள் வர வேண்டும் என பிசிசிஐ விரும்புகிறது. ஒரு நிறுவனங்கள் எத்தனை பெயர்களுக்கு வேண்டுமெனாலும் விண்ணப்பிக்கலாம்.
ஏலத்தில் பங்ேகற்கத் தகுதியான நிறுவனங்களை பட்டியலிடம் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டது. அடுத்தவாரத்தில் இரு புதிய அணிகளின் உரிமையாளர்கள் யார் என்பது தெரிந்துவிடும் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஸ்பெண்ட் செய்யப்பட்டபின் புனே ரைஸிங் சூப்பர் ஜெயின்ஸ்ட், குஜராத் லயன்ஸ் ஆகிய இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டன. அதன்பி ன் இரு ஆண்டுகளில் அந்த அணிகள் நீக்கப்பட்டன.
அந்த வகையில், 2 ஆண்டுகளாக புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி கோயங்கா குழுமத்தின் ஆர்பிஎஸ்ஜி நிறுவனம் நடத்தியது. அதுமட்டுமல்லாமல் கால்பந்து லீக்கில் ஏடிகே மோகன் பாகன் அணியையும் ஆர்பிஎஸ்ஜி நிறுவனம் நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.
டெல்லி கேபிடல்ஸ் அணியை நடத்தும் ஜின்டால் குழுமத்தின் தலைவர் நவின் ஜிண்டாலின் சகோதரர் சஜன் ஜிண்டாலும் இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளார். இது தவிர மிகப்பெரிய நிறுவனமான அதானி குழுமமும் ஏலத்தில் பங்கேற்கிறது.