

மகளிர் டி 20 உலகக் கோப்பை யில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள மேற்கிந்தியத் தீவுகள், வங்கதேசம் அணிகள் இடையேயான ஆட்டம் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
ஜஹனரா ஆலம் தலைமை யிலான வங்கதேச அணிக்கு இது 3-வது ஆட்டமாகும். அந்த அணி முதல் ஆட்டத்தில் இந்தியாவிடம் 72 ரன்கள் வித்தியாசத்திலும், இங்கிலாந்திடம் 36 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியை சந்தித்தது. இன்றைய ஆட்டத் திலும் தோல்வியை சந்தித்தால் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்கும்.
ஸ்டெபானி டெய்லர் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இது இரண்டாவது ஆட்டம். அந்த அணி முதல் ஆட்டத்தில் இதே மைதானத்தில் பாகிஸ்தான் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தது.
இந்த ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் 103 ரன்கள் மட்டுமே எடுத்தாலும் சிறப்பான பந்து வீச்சால் பாகிஸ்தான் அணியை 99 ரன்களில் கட்டுப்படுத்தியது. இரண்டவாது வெற்றி பெறும் முனைப்புடன் மேற்கிந்தியத் தீவுகள் களமிறங்குகிறது.
இலங்கை-அயர்லாந்து
ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இலங்கை-அயர்லாந்து அணிகள் இடையேயான ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு மொஹாலியில் நடைபெறுகிறது.