Last Updated : 20 Oct, 2021 04:30 PM

 

Published : 20 Oct 2021 04:30 PM
Last Updated : 20 Oct 2021 04:30 PM

 டி20 உலகக் கோப்பைக்காக ஸ்காட்லாந்து அணியின் ஜெர்ஸியை வடிவமைத்த 12வயது மாணவி

ஸ்காட்லாந்து அணி அணிந்திருந்தஜெர்ஸி | படம் உதவி ட்விட்டர்

துபாய்


டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தகுசிச்சுற்றில் பங்கேற்று வரும் ஸ்காட்லாந்து அணி அணிந்துள்ள நீலம் மற்றும் பர்பிள்நிற ஜெர்ஸியை அந்நாட்டைச் சேர்ந்த 12 வயது மாணவி வடிமைத்துள்ளார்.

ரெபேக்கா டவுனி என்ற 12 வயது சிறுமி தனதுநாட்டு அணிக்காக இந்த ஜெர்ஸியை வடிைமத்துள்ளார்.

ரெபேக்கா வடிமைத்த இந்த ஜெர்ஸி டிசைன் அனைவரையும் கவரவே இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஸ்காட்லாந்து அணிக்காக ஜெர்ஸிைய வடிமைக்க பள்ளி மாணவர்களிடம் ஸ்காட்லாந்து அணி நிர்வாகம் கேட்டிருந்தது. ஏறக்குறைய 200 பள்ளிகளிடம் இருந்து ஜெர்ஸிக்கான டிைசன் வந்திருந்தது. இதில் ரெபேக்கா வடிவமைத்த ஜெர்ஸியில் ஸ்காட்லாந்து நாட்டின் தேசியக் கொடியின் வண்ணம், சின்னம் ஆகியவை இருந்ததால் இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

ரெபேக்கா டவுனி

சிறுமி ரேபேக்காவுக்கு நன்றி தெரிவித்து ஸ்காட்லாந்து கிரிக்கெட் வாரியம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ ஸ்காட்லாந்து குழந்தை டிசைனர் ஹேடிங்டனைச் சேர்ந்த 12வயதான ரெபேக்கா டோனி தேசிய அணிக்காக ஜெர்ஸியை வடிவமைத்துள்ளார். அவர்வடிமைத்த இந்த ஆடையை பெருமையுடன் அணிகிறோம். மீண்டும் ரேபேக்காவுக்கு வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளது.

ரெபேக்கா டவுனி அளித்த பேட்டியில் “ நான் ஜெர்ஸி வடிவமைப்புக்கான போட்டியில் வென்றுவி்ட்டேன் என்ற செய்தி மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது. என்னால் நம்பமுடியவில்லை. இந்த ஜெர்ஸியை வடவமைத்தமைக்காக தேசிய அணியை காணும் வாய்ப்புக் கிடைத்துள்ளது, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தையும் காணப் போகிறேன். நான் வடிவமைத்த ஆடையுடன் சென்று போட்டியை பார்த்து ரசிப்பேன் உலகக் கோப்பைப் போட்டியில் எனது அணியை உற்சாகப்படுத்துவேன்”எனத் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஸ்காட்லாந்து அணி தற்போது 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது, சூப்பர் 12 சுற்றுக்கும் தகுதி பெற்றுவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x