

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பட்டின்ஸன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார்.
டிசம்பர் மாதம் ஆஷஸ் டெஸ்ட் தொடர் வர இருக்கும்நிலையில் உடல்நிலையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஓய்வு பெறுவதாக பட்டின்ஸன் அறிவித்துள்ளார். அதேநேரம் உள்நாட்டுப் போட்டிகளிலும் விக்டோரியா அணிக்காகவும்தொடர்ந்து விளையாடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
31 வயதாகும் பட்டின்ஸன் ஆஸ்திரேலிய அணிக்காக 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 81 விக்கெட்டுகளையும், 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழத்தி்யுள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு டேவிட் வார்னர், மிட்ஷெல் ஸ்டார்க் ஆகியோருடன் சேர்ந்து பட்டின்ஸன் ஆஸ்திரேலிய அணியில் அறிமுகமாகினார்
கடைசியாக 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் சிட்னியில் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பட்டின்ஸன் ஆஸிஅணியில் விளையாடினார்.அதன்பின் அவருக்கு காலில் ஏற்பட்ட காயம்,முழங்காலில் ஏற்பட்ட காயம் ஆகியவற்றால் தொடர்ந்து விளையாட முடியாமல் இருந்தார்.
கடந்த 2015ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக லீட்ஸில் நடந்த ஒருநாள் போட்டிதான் கடைசியாக பட்டின்ஸன் விளையாடியது. அதன்பின் ஒருநாள் போட்டியில் கவனம் செலுத்தாமல் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடிவந்தார்.
ஐபிஎல் டி20 தொடரில் 2013ம்ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலும், அதன்பின் 2020ம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியிலும் பட்டின்ஸன் விளையாடினார். 2020ம் ஆண்டு சீசனின்போது மும்பை இந்தியன்ஸ் வீரர் மலிங்கா திடீரென விலகியதைத் தொடர்ந்துபட்டின்ஸன் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தொடர்ச்சியாக காயத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டுவருவதால் சர்வேதச கிரிக்கெட்டிலிலருந்து விடைபெறுவதாக பட்டின்ஸன் திடீரென அறிவித்துள்ளார்.
ஆஸி. கிரிக்கெட் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் “ ஆஷஸ் தொடருக்காக நான் முன்கூட்டியே தயாராக இருந்தேன். ஆனால் என்னால் முறையாக தயாராக முடியாத அளவுக்கு காயத்தால்அவதிப்பட்டேன்.
இந்த நிலையுடன் நான் ஆஷஸ் தொடரில் பங்கேற்றால் என்னால் நியாயமாக நடந்து கொள்ள முடியாது. என்னுடைய உடல்நிலை 100 சதவீதம் முழுைமயக உடற்தகுதியுடன்இல்லை, பேட்டிங்கும், பந்துவீசவும் இயலாது. இதனால் என்னுடைய அணிக்கு நான் நேர்மையானவராக நடக்கமுடியாது.
உயர்ந்தநிலையில் கிரிக்கெட் விளையாடுவதற்கு முயற்சிப்பதற்கு பதிலாக, இன்னும் 3 அல்லது 4ஆண்டுகள் மட்டுமே என்னால் விளையாட முடியும் என்பது எனக்குத் தெரியும். ஆதலால், நான்உள்நாட்டு அணியான விக்டோரியாவுக்கு மட்டுமே விளையாடுகிறேன். இளம் வீரர்களை உருவாக்க துணை செய்கிறேன், என் குடும்பத்தாருடன் அதிகநேரத்தை செலவிடுகிறேன்
இவ்வாறு பட்டின்ஸன் தெரிவித்துள்ளார்.