Published : 19 Oct 2021 03:07 AM
Last Updated : 19 Oct 2021 03:07 AM

தோனி இல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இல்லை: இந்தியா சிமென்ட்ஸ் நிர்வாக இயக்குநர் என்.சீனிவாசன் உருக்கம்

ஐபிஎல் டி20 வெற்றிக் கோப்பையை சென்னை தி.நகர் திருமலை திருப்பதி தேவஸ்தான கோயிலில் வைத்து இந்தியா சிமென்ட்ஸ் நிர்வாக இயக்குநர் என்.சீனிவாசன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா குருநாத் ஆகியோர்வழிபட்டனர். அருகில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு முன்னாள் உறுப்பினர் ஏ.ஜெ.சேகர் உள்ளிட்டோர்.படம்: பு.க.பிரவீன்

சென்னை

‘‘தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை, சிஎஸ்கே இல்லாமல் தோனி இல்லை’’ என இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என்.சீனிவாசன் தெரி வித்தார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இறுதி போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இந்நிலையில், அந்த அணியின் நிர்வாகக் குழு சார்பில் ஐபிஎல் கோப்பையை தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோயிலில் வைத்து நேற்று பூஜை செய்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையை கொண்டுள்ள இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என்.சீனிவாசன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா குருநாத், சென்னைசூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைநிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் என்.சீனிவான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முதல்வர் தலைமையில் விழா

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பையில் ஆலோசகராக தனது பணியைமுடித்துவிட்டு தோனி சென்னை திரும்புவார். அதன் பின்னர் அவர் கோப்பையுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்க உள்ளார். தொடர்ந்து முதல்வர் தலைமையில் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னைசூப்பர் கிங்ஸ் அணிக்கு பாராட்டுவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்ய முடிவு செய்யப்பட் டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தோனி சிஎஸ்கேவில் தொடர்வாரா? என்பது குறித்து என்.சீனிவாசன் கூறும்போது, “சென்னை சூப்பர் கிங்ஸ், சென்னை, தமிழகம் ஆகியவற்றின் ஒரு பகுதியாக தோனி உள்ளார். சிஎஸ்கே இல்லாமல் தோனி இல்லை, தோனிஇல்லாமல் சிஎஸ்கே இல்லை. வீரர்களை தக்கவைத்துக் கொள்ளும் விதிமுறைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அது தெரிந்தபின்னரே வீரர்களைத் தக்க வைப்பது குறித்து முடிவு செய் யப்படும்” என்றார்.

சிஎஸ்கே அணியில் தமிழகத்தைச் சேர்ந்த எந்த கிரிக்கெட் வீரரும் இடம் பெறவில்லையே? என்றுகேட்டதற்கு, “ஐபிஎல் மற்றும் பிற சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்காக டிஎன்பிஎல் தொடர் 13 வீரர்களை உருவாக்கியுள்ளது. இந்தத் தொடர் வலிமை அடைந்து வருகிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x