ராமநாதபுரத்தில் மாநில ஹாக்கி போட்டி

ராமநாதபுரத்தில் மாநில ஹாக்கி போட்டி
Updated on
1 min read

மாநில அளவிலான சீனியர் ஹாக்கி போட்டி ராமநாதபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செயற்கை புல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டிக்கு தமிழ்நாடு ஹாக்கி சங்கம், ராமநாதபுரம் மாவட்ட ஹாக்கி சங்கம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

20-ம் தேதி வரை நடைபெற உள்ள இப்போட்டியில் 32 மாவட்ட அணிகள் பங்கேற்கின்றன. ஏப்ரல் மாதம் உத்தரப்பிரதேச மாநிலத் தில் நடைபெற உள்ள அகில இந் திய சீனியர் ஹாக்கிப் போட்டியில் கலந்து கொள்ளும் தமிழக வீரர்கள் இப்போட்டியின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேற்று நடந்த முதல் போட்டியில் 5-0 என்ற கோல் கணக்கில் ராமநாதபுரம் அணி கன்னியாகுமரியை வென்றது. மற்றொரு போட்டியில் திருவாரூர் அணியை 7-1 என்ற கோல் கணக்கில் தருமபுரி வென்றது. திருவண்ணாமலை அணிக்கு எதிரான மற்றொரு போட்டியில் திருச்சி அணி 9-0 என்ற கோல்கணக்கில் வென்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in