வாணவேடிக்கை காட்டுவாரா கிறிஸ் கெய்ல்: இங்கிலாந்து- மேற்கிந்தியத் தீவுகள் இன்று பலப்பரீட்சை

வாணவேடிக்கை காட்டுவாரா கிறிஸ் கெய்ல்: இங்கிலாந்து- மேற்கிந்தியத் தீவுகள் இன்று பலப்பரீட்சை
Updated on
1 min read

டி 20 உலகக் கோப்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடை பெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் மோது கின்றன.

உலகக்ம் முழுவதும் நடை பெறும் பல்வேறு டி 20 லீக் தொடரில் விளையாடிய அனுபவம் கொண்ட வீரர்களை உள்ளடக்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியும், சமபலத்துடன் காணப்படும் இங்கிலாந்து அணியும் மோதும் இன்றைய ஆட்டத்தில் கடினமான போட்டி நிலவும் என்றே கருதப்படுகிறது.

2012ல் சாம்பியன் பட்டம் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஆல்ரவுண்டர்கள் அதிக அளவில் உள்ளனர். அதேவேளையில் 2010ல் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி இரண்டாவது முறையாக சாதிக்கும் முனைப்பில் துடிப்புடன் உள்ளது.

டேரன் சமி தலைமையில் களமிறங்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஆல்ரவுண்டர்கள் வரிசை யில் டிவைன் பிராவோ, ஆந்த்ரே ரஸல் நம்பிக்கை அளிக்கக்கூடிய வர்களாக உள்ளனர். இங்கிலாந்து அணிக்கு எதிராக 9 ஆட்டத்தில் விளையாடி 5 வெற்றிகளை பதிவு செய்துள்ளது மேற்கிந்தியத் தீவுகள்.

டி 20 உலகக் கோப்பையில் இரு அணிகளும் நேருக்கு நேர் சந்திப்பது இது 7வது முறையாகும். இதற்கு முன்னர் தலா மூன்று ஆட்டங்களில் இரு அணிகளும் வெற்றி கண்டுள்ளன. சுழலுக்கு சாதகமான வான்கடே மைதானத்தில் இரு அணிகளும் எப்படி விளையாடுகின்றன என்பதை பொறுத்தே இன்றைய ஆட்டத்தின் முடிவு அமையக்கூடும்.

இங்கிலாந்து அணி அடில் ரஷித், மொயின் அலி, லயாம் டாவ்ஸன் ஆகிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. அதேவேளையில் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் சாமுவேல் பத்ரி, சுலைமான் பென், மார்லோன் சாமுவேல்ஸ் ஆகியோர் சுழலில் பலம் சேர்க்கக்கூடியவர்களாக உள்ளனர்.

பேட்டிங்கில் எந்த வகையான பந்து வீச்சையும் துவம்சம் செய்யும் கிறிஸ் கெய்ல் தொடரை இன்று வெற்றிகரமாக தொடங்க உதவக் கூடும். இங்கிலாந்து பேட்டிங்கில் கேப்டன் மோர்கன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர் பலம் சேர்க்கக்கூடியவர்களாக உள்ள னர்.

அணி விவரம்:

மேற்கிந்தியத் தீவுகள்:

டேரன் சமி (கேப்டன்), , கிறிஸ் கெய்ல், கார்லோஸ் பிரத்வெய்ட், டிவைன் பிராவோ, ஆந்த்ரே ரஸல், மார்லன் சாமுவேல்ஸ், ஜான்சன் சார்லஸ், ஆந்த்ரே பிளட்சர், ஜேசன் ஹோல்டர், எவின் லூயிஸ், ஆஷ்லே நர்ஸ், தினேஷ் ரம்தின், சாமுவேல் பத்ரி, சுலைமான் பென்,ஜெரோம் டெய்லர்.

இங்கிலாந்து:

மோர்கன் (கேப்டன்), ஜேசன் ராய், ஜேம்ஸ் வின்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட், மொயின் அலி, ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், சாம் பிலிங்ஸ், கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, லயாம் பிளங்கெட், ரீஸ் டாப்ளே, கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷீத், லியாம் டாவ்ஸன்.

நேரம்: இரவு 7.30

இடம்: மும்பை

ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in