Last Updated : 12 Oct, 2021 09:09 AM

 

Published : 12 Oct 2021 09:09 AM
Last Updated : 12 Oct 2021 09:09 AM

ஆர்சிபிக்காக கடைசி நாள்வரை நிச்சயமாக விளையாடுவேன்; விஸ்வாசமாக இருப்பேன்: 120% உழைப்பை கொடுத்திருக்கிறேன்: விராட் கோலி உருக்கம்


ஆர்சிபி அணிக்காக நிச்சயமாக விளையாடுவேன். ஐபிஎல் தொடரில் நான் விளையாடும் கடைசி நாள் வரை அணிக்காக விஸ்வாசமாக இருப்பேன், இந்த அணிக்காக 120 சதவீதம் உழைப்பை வழங்கியிருக்கிறேன் என்று ஆர்சிபி கேப்டன் விராட் கோலி உருக்கமாகத் தெரிவித்தார்.

ஷார்ஜாவில் நேற்று நடந்த எலிமினேட்டர் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் சேர்த்தது. 139 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

ஆர்சிபி அணிகடந்த இரு சீசன்களாக ப்ளேஆஃப் சுற்றுக்குள் வந்தும் கோப்பையை வெல்ல முடியாமல் தோல்வியுடன் வெளியேறியது.

ஆர்சிபி அணிக்கு கடந்த 10 ஆண்டுகளாக கேப்டனாக இருந்தும் விராட் கோலியால் ஒரு கோப்பையைக்கூட வென்று கொடுக்க முடியவில்லை. சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த கேப்டன் கோலி என்பதில் ஐயமில்லை, ஆனால், எதையும் வெற்றியாக மாற்ற முடியவில்லை எனும் போது ஏதோ ஓர் இடத்தில் தவறு நேர்கிறது தெரிகிறது. கடந்த இரு சீசன்களிலும் ஆர்சிபி அணிக்கு சிறந்த வீரர்கள் அமைந்த போதிலும் கோப்பையை வெல்ல முடியாமல் போனது துரதிர்ஷ்டம்.

ஆர்சிபி அணியில் ஒருவீரராகத் தொடர்வேன் என்று கோலி விஸ்வாசத்துடன் தெரிவித்தாலும் "ரேஸில்" தோல்வி அடைந்த குதிரையை வைத்துக் கொள்ள இனிமேலும் அணி உரிமையாளர்கள் விரும்பமாட்டார்கள். ஆதலால், ஆர்சிபி அணிக்கும், விராட் கோலிக்கும் இடையிலான உறவும், ஆர்சிபி அணிக்கு கேப்டன் என்ற கோலியின் சகாப்தம் இந்த சீசனோடு முடிந்தது?. அடுத்த சீசனில் ஆர்சிபிஅணிக்கு கோலி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்படுவாரா என்பது யாருக்கும் தெரியாது.

இந்நிலையில் போட்டியின் முடிவுக்குப்பின் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஆர்சிபி அணியில் ஒரு வீரராக நான் தொடர்வேன், அந்த அணிக்காக விஸ்வாசமாக இருப்பேன். விஸ்வாசம் என்பது என்னைப் பொறுத்தவரை வார்த்தைகளில் கூறுவதை மேலானது. ஆர்சிபி அணியில் வந்து விளையாடும் இளம் வீரர்கள் நம்பிக்கையுடனும், சுதந்திரமாகவும் விளையாடும் கலாச்சாரத்தை நான் உருவாக்க முயற்சித்துள்ளேன். இதேபோன்ற கலாச்சாரத்தைத்தான் நான் இந்திய அணியிலும் உருவாக்கியிருக்கிறேன்.

நான் என்னால் முடிந்த அளவு சிறப்பாக அணிக்காகச் செய்திருக்கிறேன். இதற்கான எதிர்வினை, பதில் எவ்வாறு இருக்கும் என எனக்குத் தெரியாது. ஆனால், ஆர்சிபி அணிக்காக 120 சதவீதம் உழைப்பை ஒவ்வொருமுறையும் வழங்கியிருக்கிறேன். அடுத்த ஒரு வீரராகவும் இதை நான் செய்வேன். அடுத்த 3 ஆண்டுகளுக்கு மீண்டும் மறுசீரமைக்கவும், மறுகட்டமைப்பை உருவாக்குவும், அடுத்த யார் தலைமையில் செல்லப் போகிறோம் என்பதற்கான சிறந்த நேரம்.

நான் வேறு ஏதாவது அணியில் விளையாடுவேன் என்று என்னை பார்க்கவில்லை. விஸ்வாசம் என்பது உலக இன்பங்களைவிட எனக்கு முக்கியம். ஐபிஎல் தொடரில் கடைசிப் போட்டியில் நான் கடைசியாக விளையாடும்வரை நான் ஆர்சிபி அணிக்காக விளையாடுவேன்.

ஆட்டத்தின் நடுப்பகுதி ஓவர்களில் கொல்கத்தா அணியின் நரேன், வருண், சஹிப் ஆகிய 3 சுழற்பந்துவீச்சாளர்களும் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி, ஆதிக்கம் செலுத்தினர். லைன் லென்த்தில் சரியாக வீசி, விக்கெட்டுகளை வீழ்த்தினர். நாங்கள் சிறப்பாக ஆட்டத்தைத் தொடங்கினோம், ஆனால், நடுப்பகுதியில் விக்கெட்டுகளை இழந்துவி்ட்டோம்.

எங்களின் பந்துவீச்சு சிற்பபாக இருந்தது கடைசி வரை போராடினோம். பேட்டிங்கும் மோசாக அமையவில்லை. ஒட்டுமொத்தத்தில் நாங்கள் இந்த சுற்றில் வென்று அடுத்த சற்றுக்குச் செல்ல தகுதியானவர்கள். கடைசி ஓவர்கள்வரை போராடியது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது , அதுதான் எங்கள் அணியின்அடையாளம். கிறிஸ்டியன் ஓவரில் 22 ரன்கள் சென்றதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது, வெற்றி வாய்ப்பைக் குறைத்தது.

15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம், இரு ஓவர்களில் அதிகமாக ரன்கள் கொடுத்ததும் வெற்றியை இழக்க காரணமாக அமைந்தது. சுனில்நரேன் எப்போதும் தரமான பந்துவீச்சாளர் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார். வருண் எங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார், எந்த பேட்ஸ்மேனையும் நடுப்பகுதி ஓவர்களில் செட்டில் ஆகவிடவில்லை

இவ்வாறு கோலி தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x