கேப்டன் பதவிக்கு தகுதியுடன் இல்லை: இன்னும் 4 நாட்களில் ஓய்வு முடிவு- ஷாகித் அப்ரீடி தகவல்

கேப்டன் பதவிக்கு தகுதியுடன் இல்லை: இன்னும் 4 நாட்களில் ஓய்வு முடிவு- ஷாகித் அப்ரீடி தகவல்
Updated on
1 min read

கேப்டன் பதவிக்கு நான் தகுதியுடன் இல்லை, நாடு திரும்பியதும் 4 முதல் 5 நாட்களில் எனது ஓய்வு முடிவை அறிவிப்பேன் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷாகித் அப்ரீடி தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய அணியிடம் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து டி 20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது தொடர்பாக பாகிஸ்தான் கேப்டன் ஷாகித் அப்ரீடி கூறும்போது,

‘‘முதலில் ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த் துகளை தெரிவித்துக்கொள்கி றேன். நாங்கள் போதுமான அளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப் படுத்தவில்லை. கடைசி 4 ஓவர் களில் 40 ரன்களே சேர்த்தோம். நாடு திரும்பியதும் 4 முதல் 5 நாட்களில் எனது ஓய்வு முடிவு குறித்து முடிவு எடுப்பேன்.

எனது நாட்டில் வைத்து தான் ஓய்வு முடிவை அறிவிப்பேன். நாட்டுக்கு எது நல்லதோ, அந்த வழியிலே செல்வேன். நெருக்கடி என்பது மீடியாக்களிடம் இருந்து தான் வருகிறது. ஒரு வீரராக நான் தகுதியுடன் உள்ளேன். ஆனால் கேப்டனாக நான் தகுதியுடன் இல்லை. அணி நிர்வாகம், தேர்வுக்குழு, வாரியத் தலைவர் என அனைவருமே எனக்கு வெளியில் இருந்து உதவினர்.

போட்டியை நேரில் கண்டு களித்து எங்களுக்கு ஆதரவளித்த பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் மக்களுக்கும் நன்றி தெரி விக்கிறேன். பிசிசிஐ-க்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.

இவ்வாறு அப்ரீடி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in