

மகளிருக்கான டி 20 உலக கோப்பை போட்டி இன்று தொடங்குகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.
ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, அயர்லாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகளும் பி பிரிவில் வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந் தியத் தீவுகள் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
தொடக்க நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறு கின்றன. பெங்களூருவில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா வங்கதேச அணிகள் மோதுகின்றன. டி 20 உலக கோப்பையில் இருமுறை அரையிறுதி, இரு முறை லீக் ஆட்டங்களுடன் வெளியேறி உள்ள இந்திய அணி மிதாலி ராஜ் தலைமையில் உலக கோப்பையை எதிர்கொள்கிறது.
டெல்லியில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி இலங்கையை எதிர்கொள் கிறது.