

ஆசியக் கோப்பை டி20 தொடரில் தொடர்ச்சியாக மூன்று வெற்றி களை பெற்ற நிலையில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான இந்திய அணி இன்று இரவு 7 மணிக்கு மிர்புரில், ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதுகிறது.
இலங்கைக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னே றிய இந்திய அணியில் இன்று மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது. டி 20 உலகக்கோப்பைக்கு முன்ன தாக அணியில் உள்ள மற்ற வீரர் களின் திறனை மதிப்பீடு செய்ய தோனி முயற்சிக்கக்கூடும்.
ரஹானே
அஜிங்க்ய ரஹானே, ஹர்பஜன்சிங், பவன் நேகி, புவனேஷ்வர் குமார் ஆகியோரில் இருவர் அல்லது மூன்று பேருக்கு இன்றைய விளையாடும் லெவனில் வாய்ப்பு கொடுக்கப்படலாம். இதனை இலங்கை ஆட்டத்தின் முடிவில் தோனியும் உறுதிப்படுத் தியிருந்தார். இந்த நால்வரில் ரஹா னேவுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஸ்விங் ஆடுகளத்தில் பந்தை எதிர் கொள்வதில் ஷிகர் தவண் சிரமப் படுவதால் அவர் இடத்தை ரஹானே நிரப்ப வாய்ப்புள்ளது.
இன்னும் ஒரு மாதத்தில் 37வது வயதை கடக்க உள்ள ஆஷிஸ் நெஹ்ரா கடந்த ஒரு மாதத்தில் தொடர்ச்சியாக ஒன்பது டி20 ஆட்டங்களில் பங்கேற்று 31 ஓவர்கள் வீசி, 12 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்டதால் இன்றைய ஆட்டத்தில் நெஹ்ரா வுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு புவனேஷ்வர் குமார் சேர்க்கப்படக் கூடும்.
பந்தை ஸ்விங் செய்யும் திறன் கொண்ட அவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டியிலும் முதன்மை பந்து வீச்சாளராக திகழ்ந்தார். ஆனால் தற்போது விளையாடும் லெவனில் இடம் பெற முடியாமல் தவித்து வருகிறார். தற்போது தனது பந்து வீச்சை மேம்படுத்தியுள்ள அவர் வலுவில்லாத ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக ஒரு சில விக்கெட்டுகளை எளிதாக வீழ்த்தும் பட்சத்தில் தனது தன்னம்பிக்கையை அதிகரித்து கொள்வார்.
சுழற்பந்து வீச்சு
எதிரணியை கருத்தில் கொண்டு இரண்டாவது வரிசை சுழற்பந்து வீச்சாளர்களை தோனி பயன் படுத்தக்கூடும். இதனால் அஸ்வின், ஜடேஜாவுக்கு பதிலாக ஹர்பஜன் சிங், பவன் நேகி வாய்ப்பை பெறு வார்கள். ஐபிஎல் ஏலத்தில் டெல்லி அணிக்காக ரூ.8.5 கோடியில் ஏலம் எடுக்கப்பட்ட பவன் நேகி, ஜடேஜாவை போன்றே பந்து வீசக்கூடியவர். ஆனால் பேட்டிங் கில் ஜடேஜாவை போன்று இல்லா மல் அதிரடியாக ஆடி சிக்ஸர்கள் விளாசக் கூடியவர். ஹர்பஜனுக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அவரும் தனது தன்னம் பிக்கையை அதிகரிக்கும் வகையில் சிறப்பாக செயல்பட முயற்சிப்பார்.
ஐக்கிய அரபு அமீரகம்
பேட்டிங்கில் பலவீனமாக இருக்கும் ஐக்கிய அரபு அமீரகம் அணி பந்து வீச்சில் நெருக்கடி தரக் கூடியதாகவே உள்ளது. கேப்டன் அஜ்மத் ஜாவித் இந்த தொடரில் அனைத்து அணிகளுக்கும் எதிராக ஆரம்பத்திலேயே விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். ஆனால் வலுவான இந்திய பேட்டிங் வரிசைக்கு எதிராக அவரது பந்து வீச்சு எடுபடுமா என்பது தெரியவில்லை.
இலங்கைக்கு எதிராக 18 பந்தில் 35 ரன் விளாசிய யுவராஜ்சிங், ஐக்கிய அரபு அமீரக வீரர்களின் அனுபவம் இல்லாத பந்து வீச்சை பயன்படுத்தி அதிக ரன்கள் குவிக்கக்கூடும். இதேபோல் இந்த தொடரில் எழும்பி வரும் பந்துகளை சந்திக்க சிரமப்படும் சுரேஷ் ரெய்னாவும், இறுதிப்போட்டிக்கு முன்னதாக பெரிய அளவிலான ரன்களை குவிக்க இன்றைய ஆட்டம் உதவக்கூடும். ஓட்டுமொத்தமாக இந்த ஆட்டம் இந்திய அணிக்கு சிறந்த பயிற்சி ஆட்டமாக அமையும்.
அணிகள்:
இந்தியா:
மகேந்திர சிங் தோனி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவண், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், அஜிங்க்ய ரஹானே, ரவீந்திர ஜடேஜா, பார்த்திவ் படேல், ஹர்திக் பாண்டியா, ஆஷிஷ் நெஹ்ரா, அஷ்வின், ஜஸ்ப்ரிட் பும்ரா, ஹர்பஜன் சிங், புவனேஷ்வர் குமார், பவன் நேகி.
ஐக்கிய அரபு அமீரகம்:
அஜமத் ஜாவித் (கேப்டன்), அஹ்மத் ரஜா, முகமது நவீத், முகமது ஷேசாத், முஹம்மது ஹலீம், முகம்மது உஸ்மான், ஸ்வப்னில் பாட்டீல், காதீர் அகமது, ரோஹன் முஸ்தபா, சக்லைன் ஹைதர், ஷேய்மான் அன்வர், உஸ் மான் முஷ்டாக், ஜாகீர் மஹ்சூத்.
இன்றைய ஆட்டம் இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம்
நேரம்: இரவு 7 மணி
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.