உங்கள் வெற்றி என் உடல் ஆரோக்கியத்திற்கு பங்களிப்பு செய்கிறது: தோனியிடம் முன்னாள் ஹாக்கி வீரர் பல்பீர் சிங்

உங்கள் வெற்றி என் உடல் ஆரோக்கியத்திற்கு பங்களிப்பு செய்கிறது: தோனியிடம் முன்னாள் ஹாக்கி வீரர் பல்பீர் சிங்
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஞாயிறன்று நடைபெறும் அதிமுக்கியமான உலகக்கோப்பைப் போட்டியில் இந்தியா வெற்றி பெற வீரர்களை நேரில் சென்று வாழ்த்தினார் 92 வயது முன்னாள் ஹாக்கி லெஜண்ட் பல்பீர் சிங் சீனியர்.

பல்பீர் சிங் சீனியர் (92) மூன்று முறை ஒலிம்பிக் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் விளையாடிய மிகப்பெரிய ஹாக்கி வீரர். இவர் இன்று மாலை மொஹாலி மைதானத்தில் கேப்டன் தோனி மற்றும் அணி வீரர்களைச் சந்தித்து வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்று இந்திய கேப்டன் தோனி மற்றும் அணி வீரர்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அப்போது தோனி நன்றி தெரிவித்ததோடு, பல்பீர் சிங் சீனியரின் உடல் ஆரோக்கியம் பற்றி விசாரித்தார், அதற்கு புன்னகையுடன் பதில் அளித்த பல்பீர் சிங், “உங்கள் வெற்றி என் உடல் ஆரோக்கியத்திற்கு பங்களிப்பு செய்கிறது” என்றார்.

பிறகு பிடிஐ நிறுவனத்திடம் அவர் தெரிவித்த போது, “இந்திய அணியை 3-வது உலகக்கோப்பையை (தோனியின் தலைமையில் 2007 டி20 உலகக்கோப்பை, 2011 உலகக்கோப்பையை வென்றதையடுத்து 2016 டி20 உலகக்கோப்பையையும் வெல்ல) வெல்ல வாழ்த்து தெரிவிக்க வந்தேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in