

மேற்கிந்திய தீவுகள் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்களில் பாதிக்கு மேலானோர் உலகின் பல்வேறு இடங்களில் நடைபெறும் டி 20 லீக் போட்டியில் விளையாடி உள்ளனர். இவர்கள் ஒரே அணியாக இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிச்சயம் டி 20 உலகக்கோப்பையை வெல்வோம் என மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சு ஆலோசகர் அம்ப்ரோஸ் தெரிவித்துள்ளார்.
--------------------------------------
கோலாலம்பூரில் நடைபெற்று வரும் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஆடவர் அணி 0-3 என்ற கணக்கில் நைஜிரியாவிடம் தோல்வியடைந்தது. அதேவேளையில் இந்திய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் போர்ச்சுக்கல் அணியை வீழ்த்திய 4வது சுற்றுக்கு முன்னேறியது.
--------------------------------------
ஆசிய கோப்பை டி 20ல் பாகிஸ்தான் அணி நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
--------------------------------------
ஆசிய கோப்பை டி 20 தொடரில் இருந்து காயம் காரணமாக வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜுர் ரஹ்மான் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக தொடக்க வீரரான தமிம் இக்பால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
--------------------------------------
இந்திய அணி உலகத்தரம் வாய்ந்த வீரர்களை கொண்டுள்ளதால் டி 20 உலக்கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக நிச்சயம் இருக்கும். ரோஹித் சர்மா, ஷிகர் தவண் ஜோடி 7 அல்லது 8 ஓவர்கள் களத்தில் நின்றுவிட்டால் யாரும் அணியை தடுத்து நிறுத்த முடியாது என முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.