

டி 20 உலகக் கோப்பையில் குரூப் 2-ல் இடம் பெற்றுள்ள நியூஸி லாந்து-பாகிஸ்தான் அணிகள் இன்று இரவு 7.30 மணிக்கு மொஹாலியில் மோதுகின்றன. நியூஸிலாந்து அணி அரையி றுதிக்கு முன்னேறும் முனைப் புடன் இந்த ஆட்டத்தை எதிர்கொள்கிறது.
வில்லியம்சன் தலைமை யிலான நியூஸிலாந்து அணி இந்த உலகக் கோப்பையில் ஆரவார மின்றி முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. அந்த அணி, முதல் ஆட்டத்தில் பட்டம் வெல்லும் அணிகளுள் ஒன்றாக கருதப்படும் இந்தியாவை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
வலுவான பேட்டிங் வரிசை கொண்ட இந்திய அணியை, நாதன் மெக்கலம், மிட்செல் ஷான்டர், இஷ் சோதி ஆகிய மூவர் சுழல் கூட்டணி பதம் பார்த்தது. இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்தி ரேலிய அணிக்கும் நியூஸிலாந்து அதிர்ச்சி தோல்வி கொடுத்தது. கடைசி கட்டத்தில் மெக்லினஹன் சிறப்பாக பந்து வீசி நெருக்கடி கொடுத்ததால் அந்த ஆட்டத் தில் 8 ரன்கள் வித்தியா சத்தில் நியூஸிலாந்து வெற்றி பெற்றது.
நியூஸிலாந்து அணி இதுவரை முன்னணி வேகப்பந்து வீச்சாளர் களான டிம் சவுதி, டிரென்ட் பவுல்ட் ஆகியோரை களமிறக்காமலேயே வெற்றி கண்டுள்ளது. பேட்டிங் கிலும் அந்த அணியின் முன்னணி வீரர்கள் ஒருவர் கூட அரை சதத்தை எட்டவில்லை. இந்தியாவுக்கு எதிராக அதிகபட்சமாக கோரே ஆண்டர்சன் 34 ரன்னும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மார்ட்டின் கப்தில் 39 ரன்னும் சேர்த்தனர்.
இரு ஆட்டத்தில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி, இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தும்பட்சத்தில் அரையிறு திக்கு முதல் அணியாக தகுதி பெறும். இதனால் நியூஸிலாந்து வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடும்.
ஐசிசி உலகக் கோப்பை தொடர் களில் 11-வது முறையாக இந்தியா விடம் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி இன்றைய ஆட்டத்தில் எழுச்சி காண முயற்சிக்கும். தோல்வியடைந் தால் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்க நேரிடும் என்பதால் மிகுந்த நெருக்கடியில் உள்ளது அப்ரீடி தலைமையிலான பாகிஸ்தான் அணி.
ஆசியக் கோப்பையில் மோசமான தோல்விகளால் தொடரில் இருந்து விரைவிலேயே வெளியேற்றப்பட்ட பாகிஸ்தான் அணி டி 20 உலகக் கோப்பையை வெற்றியுடன் தொடங்கியது. வங்கதேசத்துக்கு எதிராக பேட்டிங், பந்து வீச்சில் அந்த அணி வீரர்கள் அசத்தினர்.
ஆனால் இரண்டாவது ஆட்டத் தில் விராட் கோலியின் அற்புதமான ஆட்டத்தால் இந்தியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த தோல்வியால் கடும் விமர்சனங் களை சந்தித்துள்ள அப்ரீடி தலைமையிலான பாகிஸ்தான் அணி, இன்றைய ஆட்டத்தில் பதிலடி கொடுக்க முயற்சிக்கக் கூடும்.
அணிகள் விவரம்:
நியூஸிலாந்து:
வில்லியம்சன் (கேப்டன்), மார்ட்டின் கப்டில், ஹென்றி நிக்கோலஸ், லூக் ராங்கி, ராஸ் டெய்லர், காலின் முன்ரோ, கிராண்ட் எலியாட், மிட்செல் மெக்லினஹன், மிட்செல் ஷான்டர், நாதன் மெக்கலம், டிம் சவுதி, டிரென்ட் பவுல்ட், ஆடம் மில்னே, இஷ் சோதி, கோரே ஆண்டர்சன்.
பாகிஸ்தான்:
அப்ரீடி (கேப்டன்), மொகமது ஹபீஸ், ஷோயிப் மாலிக், மொகமது இர்பான், ஷர்ஜீல் கான், வஹாப் ரியாஸ், முகமது நவாஸ், முகம்மது சமி, காலித் லத்தீப், மொகமது அமீர், உமர் அக்மல், சர்ப்ராஸ் அகமது, இமாத் வாசிம், அன்வர் அலி, குர்ராம் மன்சூர்.