Last Updated : 01 Oct, 2021 11:15 AM

 

Published : 01 Oct 2021 11:15 AM
Last Updated : 01 Oct 2021 11:15 AM

சிஎஸ்கே அணிக்காக புதிய மைல்கல் படைத்த தோனி

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தில் விருதிமான் சாஹா அடித்த ஷாட்டில் கேட்ச் பிடித்த தோனி | படம் உதவி ட்விட்டர்

ஷார்ஜா

ஐபிஎல் டி20 தொடரில் சிஎஸ்கே அணிக்காக அந்த அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். சிஎஸ்கே அணிக்காக 100 கேட்சுகளை விக்கெட் கீப்பர் தோனி பிடித்துள்ளார்.

ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 44-வது லீக் ஆட்டத்தி்ல் சன்ரைசர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இந்த வெற்றியின்மூலம் சிஎஸ்கே அணி 11 போட்டிகளி்ல் 9 வெற்றிகள், 2 தோல்விகள் 18 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்து, ப்ளேஆஃப் சுற்றையும் உறுதி செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் 11-வது முறையாக சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்கிறது.

இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டனும்,விக்கெட் கீப்பருமான தோனி 3 கேட்சுகளைப் பிடித்தார். தொடக்க வீரர்கள் விருதிமான் சாஹா, ஜேஸன் ராய், பிரியம் கார்க் ஆகியோரின் விக்ெகட்டுகளை கேட்ச் பிடித்து தோனி வெளிேயற்றினார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில்சிஎஸ்கே அணிக்காக விக்கெட் கீப்பராக இருந்து 100 கேட்சுகளை தோனி பிடித்துள்ளார்.

இதுதொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ ஸ்பெஷல் கிரிக்கெட் வீரர், ஸ்பெஷல் மைல்கல், சிஎஸ்கே அணிக்காக விக்கெட் கீப்பராகஇருந்து தோனி 100 ேகட்சுகளைப் பிடித்துள்ளார்”எனத் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் விக்கெட் கீப்பராக இருந்து அதிகமான டிஸ்மிசல்களைச் செய்தவகையில் தினேஷ் கார்த்திக்கின் சாதனையை சமீபத்தில் தோனி முறியடித்தார். தினேஷ் கார்த்திக்கைவிட 8 டிஸ்மிசல்கள் அதிகமாக தோனி செய்துள்ளார். தோனி 215 போட்டிகளில் 158 டிஸ்மிசல்களைச் செய்துள்ளார். அதில் 119 கேட்சுகள், 39 ஸ்டெம்பிங்அடங்கும்.

ஐபிஎல் தொடரில் அதிகமான கேட்ச் பிடித்த வீரர்களில் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா 98 கேட்சுகளையும், மும்பை இந்தியன்ஸ் வீரர் கெய்ரன் பொலார்ட் 94 கேட்சுகளையும் பிடித்து முன்னணியில் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x