

நீலகிரி மாவட்டம் உதகை கிரசென்ட் பள்ளியில் தனது ‘டென்விக்’ விளையாட்டு அகாடமி மூலம் பயிற்சி பெறும் மாணவர் களுடன் நேற்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே கலந்துரையாடினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘டி 20 உலக கோப்பையை இந்திய அணி வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது.
டி 20 தர வரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்று சிறப்பான நிலையில் உள்ளது.
இளம் வீரர்களான ஹர்திக் பாண்டியா, பும்ரா, அனுபவ வீரர்களான யுவராஜ் சிங், நெஹ்ரா ஆகியோர் சிறப்பாக விளையாடுகின்றனர். பந்துவீச்சா ளர்கள் தர வரிசையில் முதலிடம் பிடித்துள்ள அஸ்வின் சுழற்பந்து வீச்சில் அசத்தி வருகிறார்’ என்றார்.