Published : 29 Sep 2021 20:16 pm

Updated : 29 Sep 2021 20:26 pm

 

Published : 29 Sep 2021 08:16 PM
Last Updated : 29 Sep 2021 08:26 PM

2019ம் ஆண்டு உலகக் கோப்பை நினைவிருக்கா; மோர்கன் தர்ணா செய்தாரா? அஸ்வினுக்கு ஆதராக களமிறங்கிய சேவாக்

ipl-2021-sehwag-pulls-up-morgan-after-altercation-with-ashwin-brings-back-memories-of-2019-wc-final
2019ம் ஆண்டு உலகக் கோப்பைஇறுதி ஆட்டத்தில் ஓவர் த்ரோவில் ஸ்டோக்ஸ் பேட்டில் பந்து பந்து பவுண்டரி சென்ற காட்சி | கோப்புப்படம்

துபாய்


நியூஸிலந்துக்கு எதிரான 2019ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வாங்கமாட்டேன் என்று மோர்கன் லார்ட்ஸ் மைதானத்துக்கு வெளியே அமர்ந்து தர்மா செய்தாரா என்று அஸ்வினுக்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் மோர்கன், அஸ்வின், டிம் சவுதி இடையிலான வார்த்தை மோதல்தான் பெரும் சர்்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


கொல்கத்தா வீரர் வெங்கடேஷ் வீசிய 19-வது ஓவரின் கடைசிப் பந்தை ரிஷப்பந்த் எதிர் கொண்டார். பந்த் தட்டிவிட்டு ஒரு ரன் எடுக்க ஓடும்போது, திரிபாதி பீல்டிங் செய்து பந்தை எறிய அது ரிஷப்பந்தின் உடலில் பட்டுச் சென்றது. இதைப் பார்த்த அஸ்வின் 2-வது ரன் ஓடினார்.

பொதுவாக பீல்டர் பந்தைப் பிடித்து எறியும்போது பேட்ஸ்மேன் உடலில் பட்டுவிட்டால் அடுத்த ரன் ஓடமாட்டார்கள். இது கிரிக்கெட்டில் கடைபிடிக்கப்படும் மரபாகும், விதிகளில் அவ்வாறு இல்லாவிட்டாலும் மரபாக கடைபிடிக்கப்படுகிறது. மன்கட்அவுட் செய்யும் முன் நான் ஸ்ட்ரைக்கரில் இருக்கும்

பேட்ஸ்மேனுக்கு எச்சரிக்கை செய்வது மரபாகும். ஆனால், விதிமுறையில் எச்சரிக்கை செய்ய வேண்டியஅவசியமில்லை. ஆனால், மரபை சில வீரர்கள் கடைப்பிடிக்கிறார்கள், பலர்கடைபிடிப்பதில்லை.
டிம் சவுதி வீசிய 20ஓவரின் முதல் பந்தில் அஸ்வின் 9 ரன்னில் ராணாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அஸ்வின் வெளியேறும்போது சவுதி அஸ்வினைப் பார்த்து ஏதோ கூறினார், அதற்கு அஸ்வின் பதிலுக்கு ஏதோ கூற வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைப் பார்த்த கேப்டன் மோர்கன் வந்து அஸ்வினுடன் வாக்குவாதம் செய்தார்.இதைப் பார்த்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், நடுவர்கள் அஸ்வினை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தார்.

மோர்கன், அஸ்வின் இடையே நடந்த வாக்குவாதம் குறித்து தினேஷ் கார்த்திக் போட்டி முடிந்தபின் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் “ ராகுல் திரிபாதி பீல்டிங் செய்து பந்தை எறிந்தபோது அது ரிஷப் பந்த் உடலில் பட்டது. ஆனால், மறுமுனையில் இருந்த அஸ்வின், 2-வது ரன்னுக்கு ரிஷப் பந்த்தை அழைத்து ஓடினார்.

ஒரு வீரர் உடலில் பந்துபட்டுவிட்டால், அடுத்த ரன் ஓடக்கூடாது என்று கிரிக்கெட்டில் எழுதப்படாத மரபு, கிரிக்கெட்டின் தார்மீகப்படி ஓடமாட்டார்கள். ஆனால், அஸ்வின் 2-வது ரன் ஓடியதை மோர்கன் வரவேற்கவில்லை என்றே நான் நினைக்கிறேன்.

இது கிரிக்கெட் விதிகளில் கூறப்படவில்லை என்றாலும், கடைபிடிக்கப்பட்டு வருகிறது, இதுபற்றி விவாதித்தால் பலசுவாரஸ்யங்களைப் பேசலாம்.” எனத் தெரிவித்தார். மோர்கனுக்கு ஆதரவாக ஆஸி. முன்னாள் வீரர் ஷேன் வார்னும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 14-ம்தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஆட்டத்தை நினைவுபடுத்தி சேவாக் கடுைமயாகச் சாடியுள்ளார். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் டிரன்ட் போல்ட் வீசிய ஓவரில் மார்டின் கப்தில் பந்தை பீல்டிங் செய்து ரன் அவுட் செய்ய எறிந்தார்

அப்ோபது பந்து பென் ஸ்டோக்ஸ் பேட் மீது பட்டு பவுண்டரிக்குச் சென்றுவிடும். இதைப் பார்த்த நடுவர் தர்மசேனா, 6 ரன்களை வழங்குவார். இந்த 6 ரன்களால்தான் ஆட்டத்தில் பெரிய திருப்புமுனை ஏற்பட்டு ஆட்டம் சமனில் முடிந்தது.

பேட்ஸ்மேன் உடலில்பட்டாலோ அல்லது பேட்டில்பந்து பட்டாலோ மேற்கொண்டு ரன் ஓடக்கூடாது என்பது மரபு ஆனாலும் விதிகளில் இல்லை. இதைச்சுட்டிக்காட்டி சேவாக் ட்விட்டரில் மோர்கனைச்சாடியுள்ளார்.

சேவாக் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ 2019, ஜூலை14ம் தேதி நினைவிருக்கா உலகக் கோப்பைப் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் கடைசி ஓவரில் பென் ஸ்டோக்ஸ் பேட்டில் பந்து பட்டு 6 ரன்கள் சென்றது. இது தார்மீகத்தை மீறியது இல்லையா. தீர்மீகத்தை மீறிவிட்டோம் என்பதற்காக மோர்கன் உலகக் கோப்பையை வாங்கமாட்டேன் என்று லாட்ர்ஸ் மைதானத்துக்கு வெளியே அமர்ந்துதர்ணா செய்தாரா. நியூஸிலாந்து உலகக் கோப்பையை வென்றுவிட்டதா. அதை யாரும் பாராட்டவில்லையே” எனத் தெரிவித்துள்ளார்.


தவறவிடாதீர்!IPL 2021SehwagMorganAshwin2019 WC finalFormer India opener Virender SehwagKKR skipperDelhi CapitalsRavichandran Ashwinஅஸ்வினுக்கு சேவாக் ஆதரவுமோர்கன்2019 உலகக் கோப்பை பைனல்பென் ஸ்டோக்ஸ்மோர்கன் அஸ்வின் மோதல்ஐபிஎல்2021ஐபிஎல்டி20Iplt20IplnewsIplupdates

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x