ஆட்டத்தின் சூழ்நிலையே பந்துவீச்சை தீர்மானிக்கிறது: ‘ஹாட்ரிக்’ ஹர்ஷால் படேல் சொல்கிறார்

ஆட்டத்தின் சூழ்நிலையே பந்துவீச்சை தீர்மானிக்கிறது: ‘ஹாட்ரிக்’ ஹர்ஷால் படேல் சொல்கிறார்
Updated on
1 min read

ஐபிஎல் டி 20 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளரும் ஹரியாணாவைச் சேர்ந்தவருமான ஹர்ஷால் படேல் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் ஹர்ஷால் படேல் ஹாட்ரிக் சாதனையுடன் 4 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

போட்டி முடிவடைந்ததும் ஹர்ஷால் படேல் கூறியதாவது: டி 20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாதது பற்றி நான் வருத்தப்படவில்லை. எனக்கு ஒரே ஒரு குறிக்கோள்தான். அது, கிளப்,ஐபிஎல், மாநில, இந்திய அணி என எதில் விளையாடினாலும், ஆட்டத்தில் எந்த ஒரு சூழ்நிலையிலும் பந்து அல்லது மட்டையின் வாயிலாக நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்வேன். அதுதான் எனது இலக்கு.

எனது வாழ்க்கையில் முதன்முறையாக ஹாட்ரிக் விக்கெட்களை கைப்பற்றியுள்ளேன். பள்ளி கால கிரிக்கெட்டில் கூட நான் ஹாட்ரிக் எடுத்தது இல்லை. என்னை பொறுத்தவரையில் ஆட்டத்தின் சூழ்நிலையே பந்துகளைவேகமாக வீச வேண்டுமா? குறைந்த வேகத்தில் வீச வேண்டுமா? என்பதை தீர்மானிக்கும். இவ்வாறு அவர் கூறினார். - பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in