தர்மசாலாவில் இன்று ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து பலப்பரீட்சை: மழையால் ஆட்டம் பாதிக்க வாய்ப்பு

தர்மசாலாவில் இன்று ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து பலப்பரீட்சை: மழையால் ஆட்டம் பாதிக்க வாய்ப்பு
Updated on
1 min read

டி 20 உலகக் கோப்பையில் குரூப் 2-ல் இடம் பெற்றுள்ள நியூஸி லாந்து-ஆஸ்திரேலிய அணிகள் இன்று தர்மசாலாவில் மோது கின்றன. பிற்பகல் 3 மணிக்கு நடை பெறும் இந்த ஆட்டத்தை ஸ்டார் கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு செய் கிறது. இதற்கிடையே இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நியூஸிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் இந்தியாவை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. இஸ் சோதி, மிட்செல் ஷான்டர், நாதன் மெக்கலம் ஆகியோரை கொண்ட மூவர் சுழல் கூட்டணி இன்றும் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தக்கூடும். நாக்பூர் ஆடுகளம் போன்றே தர்மசாலா ஆடுகளமும் மெதுவாக செயல் படக்கூடியதாகவே இருக்கும் என தெரிகிறது.

இதனால் இன்றும் 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் நியூசிலாந்து களமிறங்கக் கூடும். டி 20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு பல பரீட்சார்த்த முறைகளுக்கு பின்னரே உலகக் கோப்பைக்கான வீரர்களை ஆஸி. வாரியம் தேர்வு செய்தது.

ஷேன் வாட்சன், ஆரோன் பின்ச், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் ஐபிஎல் தொடரில் விளையாடி உள்ளதால் அந்த அனுபவம் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ் ஆகியோர் எந்த நேரத்திலும் தங்களது அதிரடியால் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய வர்கள்.

மேலும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் வார்னர் மிடில் ஆர்டரில் களமிறக்கப்பட்டார். டாப் ஆர்டரை விட மிடில் ஆர்டரில் அவர் அதிக நேரம் நிலைத்து நின்று ஆடியதுடன் அணியின் வெற்றியில் முக்கிய பங்கும் வகித்தார். எனவே அவர் இந்த தொடரிலும் மிடில் ஆர்டரிலேயே களமிறங்கக்கூடும்.

ஆஸ்திரேலிய அணியில் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் இல்லாதது குறையாகவே உள்ளது. ஆடம் ஸாம்பா, அஷ்டன் அஹர் ஆகிய இளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு விளையாடும் லெவனில் வாய்ப்பு கொடுக்கப் படுமா என்பது சந்தேகம் தான்.இந்திய துணைக்கண்டத்தில் விளையாடி அனுபவத்தை கொண்டு நியூஸிலாந்து அணியின் கோரே ஆண்டர்சன், ராஸ் டெய்லர், வில்லியம்சன் ஆகியோர் சிறப்பாக செயல்பட முயற்சி செய்வார்கள்.

மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ ஆகியோரும் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடும். இந்த இரு அணிகள் இடையேயான ஆட்டத்தில் எப்போதுமே விறு விறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதால் ரசிகர்களுக்கு விருந்து நிச்சயம்.

நேரம்: பிற்பகல் 3

இடம்: தர்மசாலா

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in