செய்தித்துளிகள்

செய்தித்துளிகள்
Updated on
1 min read

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் காயம் அடைந்த மேற்கிந்தியத் தீவுகள் வீரர் பிளட்சருக்கு பதிலாக லென்டில் சிமன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

*

மகளிர் டி 20 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இன்று ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் டெல்லி பெரோஷோ கோட்லா மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறுகிறது.

*

டி 20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி மோசமாக தோல்வி யடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. இந்நிலையில் பாகிஸ் தான் வீரர்களின் செயல்பாடு குறித்து கிரிக்கெட் வாரியத்திடம் நேற்று அறிக்கை அளித்த பயிற்சியாளர் வாக்கர் யூனிஸ், தோல்விக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் வெளியேறினால் நல்லது நடக்கும் என்றால் தாமதிக்காமல் அதனை உடனே செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

*

டி 20 உலகக் கோப்பையில் இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் மோதும் அரையிறுதி ஆட்டத்துக்கு நடுவராக கிறிஸ்பிராடும், கள நடுவர்களாக இயன் கோல்ட், ரிச்சர்டு கெட்டல்புரோ ஆகியோரும், 3-வது நடுவராக எராஸ்மஸ், 4-வது நடுவராக மைக்கேல் ஹாஃப் ஆகியோரும் செயல்படுவார்கள் என ஐசிசி தெரிவித்துள்ளது.

*

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் நடுவர் தீர்ப்பை எதிர்த்த தென் ஆப்பிரிக்க கேப்டன் டுபிளெஸ்ஸிக்கு ஆட்டத்தின் சம்பளத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

*

3-வது ஆசிய கோ-கோ போட்டிகள் வரும் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை இந்தூரில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், தென் கொரியா, நேபாளம், இலங்கை, மலேஷியா உட்பட 8 நாடுகள் கலந்துகொள்வதை உறுதி செய்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in