

மாஸ்கோவில் நடைபெற்ற கேண்டி டேட்ஸ் செஸ் போட்டியில் ரஷியாவின் செர்ஜி கர்ஜாகின் 8.5 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன்மூலம் வரும் நவம்பர் மாதம் நியூயார்க் நகரில் நடை பெறவுள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனான மேக்னஸ் கார்ல் சனை எதிர்த்து விளையாட தகுதி பெற்றுள்ளார் செர்ஜி கர்ஜாகின்.
கடைசிச் சுற்றில் கர்ஜாகினிடம் தோல்வி கண்ட அமெரிக்காவின் கருணா மற்றும் கடைசிச் சுற்றில் டிரா செய்த இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் தலா 7.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பிடித்தனர்.
5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், கடந்த 10 ஆண்டுகளில் முதல்முறையாக உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் விளை யாடும் வாய்ப்பை இழந்துள்ளார்.
2016 உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, அமெரிக்காவின் நியூயார்க் கில் நடைபெற உள்ளது. நவம்பர் 11 முதல் 30-ம் தேதி வரை வரை நடைபெற உள்ள இந்தப் போட்டி, மொத்தம் 12 சுற்றுகளைக் கொண்ட தாகும். இதில் 6.5 புள்ளிகளை எட்டும் வீரர் சாம்பியன் பட்டம் வெல்வார்.