

மிர்பூரில் நடைபெறும் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.
ரஹானேவுக்குப் பதிலாக ஷிகர் தவண் மீண்டும் அணிக்குள் வந்துள்ளார். மற்றபடி அணியில் மாற்றமில்லை.
டாஸில் வென்ற தோனி, பிட்சில் முதல் போட்டியை விட புற்கள் குறைவாக இருப்பதாகக் கூறி பேட்டிங்குக்கு சாதக ஆட்டக்களம் என்றார், மாறாக இலங்கை கேப்டன் ஆஞ்சேலோ மேத்யூஸ், முந்தைய போட்டியை விட புற்கள் அதிகம் இருக்கிறது நானும் பவுலிங் தான் செய்திருப்பேன் என்றார்.
பிட்ச் எப்படி நடந்து கொள்ளும் என்பது ஆட்டம் தொடங்கிய பிறகே தெரியவரும்.
இலங்கை அணியும் மாற்றமேதும் செய்யவில்லை.