Last Updated : 20 Sep, 2021 09:19 AM

 

Published : 20 Sep 2021 09:19 AM
Last Updated : 20 Sep 2021 09:19 AM

ருதுராஜ், பிராவோ நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக கொடுத்துவிட்டார்கள்: தோனி புகழாரம்

வெற்றிக்குப்பின் சகவீரர்களிடம் உரையாடிய கேப்டன் தோனி | படம் உதவி ட்விட்டர்

துபாய்


ருதுராஜ் கெய்க்வாட், பிராவோ இருவரும் நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக கொடுத்துவிட்டார்கள் என்று சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்தார்.

துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே அணி.ஒரு கட்டத்தில் சிஎஸ்கே அணி 7 ரன்களுக்கு 3 விக்கெட், 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி திணறியது. ஆனால், 5-வது விக்கெட்டுக்கு கெய்க்வாட், ஜடேஜா கூட்டணி, அதன்பின் பிராவோ, கெய்க்வாட் இருவரும் சேர்ந்து அணியின் ஸ்கோரை வேறு உயரத்துக்கு கொண்டு சென்றனர்.

58 பந்துகளில் 88 ரன்கள் சேர்த்து(4 சிக்ஸர்9பவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். பிராவோ பேட்டிங்கில் 8 பந்துகளில் 3 சிக்ஸர் உள்ளிட்ட 23 ரன்களையும், 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்

இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்த வெற்றி குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனி அளித்த பேட்டியில் கூறியதாவது

“ ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுகளை இழந்து 30 ரன்கள்தான் சேர்த்திருந்தம். ஆனால், அதன்பின் விரும்பியவாறு கவுரவமான ஸ்கோர் கிைடத்துள்ளது. ருதுராஜ், பிராவோ இருவரும் சேர்ந்து, நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக வழங்கிவிட்டார்கள். நாங்கள் 140 ரன்கள்தான் எதிர்பார்த்திருந்தோம், ஆனால், 160 ரன்களுக்கு அருகேசென்றது அற்புதமானது.

ராயுடு காயமடைந்து சென்றதால் அவர் மீண்டும் பேட்டிங் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், நாங்கள் சூழலுக்கு ஏற்ப பேட்டிங் செய்து, பிரமாதமாக முடித்துள்ளோம். ஒரு பேட்ஸ்மேன் தொடக்க வீரராக களமிறங்கி ஆட்டம் முடிவு வரை இருப்பது உணர்வுப்பூர்வமானது. ஆடுகளம் இருவிதமாக இருந்தது,

தொடக்கத்தில் மந்தமாக இருந்தது அதன்பின் வேகப்பந்துவீச்சுக்கு உதவியது. கடைசி வரிசையில் களமிறங்கியிருந்தாலும் பேட் செய்வது கடினமாக இருந்திருக்கும். ஆடுகளத்தில் என்ன நடக்கிறது என்பதை பார்்க்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்தாலும் பேட் செய்ய கடினமாக இருந்திருக்கும். அடுத்த போட்டிக்குள் ராயுடு உடல்நலம்தேறிவிடுவார்”

இவ்வாறு தோனி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x