Published : 19 Sep 2021 01:13 PM
Last Updated : 19 Sep 2021 01:13 PM

ஐபிஎல் 21: கோப்பையை வெல்ல யாருக்கு வாய்ப்பு?- ஷேவாக் கணிப்பு

ஐபிஎல் கோப்பையை வெல்ல மும்பை இந்தியன்ஸுக்கு கூடுதல் வாய்ப்புள்ளது. நான் ஒரு அணியைத் தேர்வு செய்ய வேண்டும் என்றால் நான் இதனை தான் தேர்வு செய்வேன் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஷேவாக் கூறியுள்ளார்.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 14-வது சீசன் போட்டிகள் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற்றது. 29 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் மே மாத தொடக்கத்தில் சில வீரர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து போட்டிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் பாதியில் நிறுத்தப்பட்ட இந்த தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் மும்பை - சென்னை அணிகள் மோதுகின்றன.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மாதம் பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஐபிஎல் டி 20 கிரிக்கெட்தொடர் துபாயில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்புசாம்பியனான மும்பை இந்தியன்ஸ், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியுடன் இரவு 7.30 மணிக்கு மோதுகிறது.

இந்தநிலையில் ஐபிஎல் இரண்டாவது போட்டிகள் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர ஷேவாக் கூறியதாவது:

இரண்டாம் பாதி துபாய் மற்றும் அபுதாபிக்கு மாற்றப்பட்டதால் டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கு வாய்ப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றவர்கள் சற்று முன்னணியில் இருப்பதாக எண்ணுகிறேன்.

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் தற்போது 7 போட்டிகளில் 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது. மறுபுறம், டிசி 8 ஆட்டங்களில் 12 புள்ளிகளுடன் அட்டவணையில் முதலிடத்தில் உள்ளது.

ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸுக்கு கூடுதல் வாய்ப்புள்ளது. நான் ஒரு அணியைத் தேர்வு செய்ய வேண்டும் என்றால் நான் இதனை தான் தேர்வு செய்வேன்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆடுகளங்கள் மெதுவாக இருக்கும், இதனால் சென்னை மற்றும் பெங்களூரு சில சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும். சென்னையில் சென்னையின் சராசரி மதிப்பெண் முதல் கட்டத்தில் 201 ஆக இருந்தது.

ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆடுகளங்கள் என வரும்போது, அவர்கள் பேட்டிங்கில் சிக்கல்களை சந்திக்கக் கூடும். சென்னைக்கு மீண்டும் பழைய பார்ம் வர இன்னும் சில போட்டிகள் எடுக்கலாம்.

அக்டோபர் 10 -ம் தேதி வரை அணிகளை மாற்ற ஐசிசி வாய்ப்பு வழங்கியதால், பஸ்ஸை தவறவிட்ட சில நல்ல வீரர்களுக்கு இன்னும் இடம் இருக்கக்கூடும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x