விவ் ரிச்சர்ட்ஸை அறிவுரையாளராக நியமிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிரம்

விவ் ரிச்சர்ட்ஸை அறிவுரையாளராக நியமிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிரம்
Updated on
1 min read

ஆசியக் கோப்பை மற்றும் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்களுக்கு பாகிஸ்தான் அணியின் அறிவுரையாளராக விவ் ரிச்சர்ட்ஸை நியமிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.

இது தொடர்பாக விவ் ரிச்சர்ட்ஸுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் அறிவுரையாளராக விவ் ரிச்சர்ட்ஸ் சிறப்பாக பணியாற்றுவதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவரை பாகிஸ்தான் அணிக்கே அறிவுரையாளராகக்க விரும்புகிறது.

ரிச்சர்ட்ஸும் இதற்கு ஆர்வம் காட்டியிருப்பதாகத் தெரிகிறது.

2014-ம் ஆண்டு முதல் ஜிம்பாப்வே பேட்ஸ்மென் கிராண்ட் பிளவர் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.

அதேபோல் முன்னாள் பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் அசார் மஹ்மூதை பந்து வீச்சு பயிற்சியாளராக இந்த 2 கிரிக்கெட் தொடர்களுக்கும் நியமிக்கவும் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

டி20 உலகக்கோப்பையை வெல்ல பாகிஸ்தான் அணி நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in