

19 வயதுக்குட்பட்டோருக்கான (யு-19) உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடை பெற்று வருகிறது. இதில் இஷான் கிஷன் தலைமையிலான இந்திய அணி லீக் போட்டியில் அயர்லாந்து, நியூஸிலாந்து நேபாளம் அணிகளை வீழ்த்தி குரூப் டி பிரிவில் முதலிடம் பிடித்து காலிறுதியில் நுழைந்திருந் தது. காலிறுதியில் நமீபியாவை 197 ரன்கள் வித்தியாசத்தில் தோற் கடித்தது. இந்நிலையில் மிர்பூரில் இன்று நடைபெறும் முதல் அரை யிறுதி ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. காலை 8.30 மணிக்கு நடைபெறும் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் இந்த தொடரில் ஒரு சதம் உட்பட 252 ரன்களும், சர்ப்ராஸ் கான் 3 அரை சதங்கள் உட்பட 245 ரன்களும் குவித்துள்ளனர். இவர்கள் இன்றும் சிறப்பாக செயல்படக்கூடும்.பந்து வீச்சில் அவேஷ்கான், மகிபால், மயங்க் தாஹர் நெருக்கடி கொடுப்பார்கள்.
வரும் 11ம் தேதி நடைபெறும் மற்றொரு அரையிறுதியில் வங்கதேசம்-மேற்கிந்திய தீவுகள் அணி மோதுகின்றன. நேற்று நடைபெற்ற கடைசி காலிறுதி ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய மேற்கிந்திய தீவுகள் 40 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.