Published : 16 Sep 2021 03:11 am

Updated : 16 Sep 2021 05:15 am

 

Published : 16 Sep 2021 03:11 AM
Last Updated : 16 Sep 2021 05:15 AM

ஐஎஸ்எல் கால்பந்து தொடர் நவ.19-ல் தொடக்கம்

indian-super-league

மும்பை

ஐஎஸ்எல் கால்பந்து தொடர் வரும்நவம்பர் 19-ம் தேதி தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் ஏடிகே மோகன் பகான் - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 8-வது சீசன் போட்டிகள் வரும் நவம்பர் 19-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான முதற்கட்ட அட்டவணையை கால்பந்து விளையாட்டு மேம்பாட்டு நிறுவனம்(எஃப்எஸ்டிஎல்) வெளியிட்டுள்ளது. கடந்த முறை போன்றே இம்முறையும் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் மட்டும் போட்டிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 115 போட்டிகள் நடைபெற உள்ளன. நவம்பர் 19-ம் தேதி தொடங்கும் முதற்கட்ட போட்டிகள் ஜனவரி 9-ம் தேதி வரை நடைபெறுகிறது.


தொடக்க ஆட்டத்தில் ஏடிகே மோகன் பகான் - கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிகள் மோதுகின்றன. இம்முறை சனிக்கிழமை இருஆட்டங்கள் நடத்தப்பட உள்ளது. இதில் 2-வது ஆட்டம் இரவு 9.30மணிக்கு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நாட்களில் வழக்கம் போல் இரவு 7.30 மணிக்குபோட்டி தொடங்கும். நடப்பு சாம்பியனான மும்பை சிட்டி எஃப்சி தனது முதல் ஆட்டத்தில் நவம்பர் 22-ம் தேதி எஃப்சி கோவா அணியை எதிர்கொள்கிறது. சென்னையின் எஃப்சி முதல் ஆட்டத்தில் நவம்பர் 23-ம் தேதி ஹைதராபாத்துடன் மோதுகிறது.




ஐஎஸ்எல் கால்பந்து தொடர்ஏடிகே மோகன் பகான்கேரளா பிளாஸ்டர்ஸ்கால்பந்து விளையாட்டு மேம்பாட்டு நிறுவனம்எஃப்எஸ்டிஎல்மும்பை சிட்டி எஃப்சிசென்னையின் எஃப்சிIndian Super League

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x