

* நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் இன்று முதல் ஒருநாள் போட்டியில் ஆக்லாந்தில் மோதுகின்றன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.
* இந்தியாவில் வரும் 5ம் தேதி தொடங்கும் தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் பாக். வீரர்கள் 456 கலந்துகொள்ள அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
* இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
* இந்தியாவின் விஜேந்தர் சிங் மோதும் 4வது தொழில் முறை குத்துச் சண்டை போட்டி மார்ச் 12ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
* தென் ஆப்பிரிக்கா - இங்கி லாந்து அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரின் முதல் ஆட்டம் புளும்போன்டைன் நகரில் இந்திய நேரப்படி இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது.
* இந்திய பாட்மிண்டன் நட்சத்திர வீரரான காஷ்யப் வயிற்று பகுதியில் ஏற்பட்ட காயத்தால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வருகிறார். காயத்தில் மீள தனக்கு ஓய்வு தேவை என அவர் கடிதம் மூலம் வலியுறுத்திய நிலையில், 5ம் தேதி தொடங்கும் தெற்காசிய விளையாட்டு போட்டியில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என அவரை இந்திய பாட்மிண்டன் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் போட்டி நடைபெறும் குவாஹாட்டி செல்வதற்கான விமான டிக்கெட்டையும் அனுப்பி வைத்துள்ளது. இதனால் காஷ்யப் அதிர்ச்சியடைந்துள்ளார்.
* ரியோ ஒலிம்பிக் கால்பந்து போட்டிகளில் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி கலந்துகொள்ளமாட்டார் என அவரது பயிற்சியாளர் ஜெர்ரார்டோ மார்ட்டினோ தெரிவித்துள்ளார்.