டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு: ஆலோசகராக தோனி நியமனம்

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு: ஆலோசகராக தோனி நியமனம்
Updated on
1 min read

ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரைஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற உள்ளது. இந்தியாதனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 24-ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

இந்நிலையில் சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழுவினர் இங்கிலாந்தில் உள்ள கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோருடன் ஆலோசனை நடத்தி இந்தியஅணியை அறிவித்தனர். சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அதேபோல, தமிழகத்தின் மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தியும் சேர்க்கப்பட்டுள்ளார். முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாற்று வீரர்களாக ஸ்ரேயஸ் ஐயர், ஷர்துல் தாக்குர், தீபக் ஷாகர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ்,ரிஷப் பந்த், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரீத் பும்ரா, புவனேஷ்வர் குமார், மொகமது ஷமி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in