எங்களுக்கு நெருக்கடி ஒன்றுமில்லை-சுரேஷ் ரெய்னா

எங்களுக்கு நெருக்கடி ஒன்றுமில்லை-சுரேஷ் ரெய்னா
Updated on
1 min read

வங்கதேசத்திற்கு எதிராக நடைபெறும் 3 ஒருநாள் போட்டிகள் தொடரில் இந்திய அணிக்கு எந்த ஒரு நெருக்கடியும் இல்லை என்று கேப்டன் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இன்று கொல்கத்தா வந்த சுரேஷ் ரெய்னா தி டெலிகிராப்பிற்கு கூறுகையில், “ஒரு நெருக்கடியும் இல்லை, நாங்கள் உண்மையில் மகிழ்ச்சியுடன்தான் வங்கதேசத்தை எதிர்கொள்கிறோம், சில வீரர்களுக்குத் தங்களை நிரூபிக்க இந்தத் தொடர் ஒரு அருமையான சந்தர்ப்பம்.

சிறிது உடற்பயிற்சியில் ஈடுபடவுள்ளதாகக் கூறிய ரெய்னா, சவுரவ் கங்கூலியை சந்திக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

ஐபிஎல் போட்டிகள் முடிந்தவுடன் குடும்பத்துடன் காஷ்மீர் சென்றதாகவும் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு அருகே சென்றதாகவும் அவர் கூறினார். இது புத்துணர்வுட்டுவதாக உள்ளது என்கிறார் சுரேஷ் ரெய்னா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in