Published : 08 Sep 2021 04:48 PM
Last Updated : 08 Sep 2021 04:48 PM

இந்திய அணியை குறைத்துமதிப்பிட்டுவிட்டது இங்கிலாந்து: சுனில் கவாஸ்கர் சாடல்


இந்திய அணியை இங்கிலாந்து அணி குறைத்து மதிப்பிட்டுவிட்டது. இந்தியத் தொடரைவிட, அடுத்துவரக் கூடிய ஆஷஸ் தொடருக்கு இனிமேல் அதிகமான கவனத்தை இங்கிலாந்து செலுத்த வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்திய அணி வென்ற இரு டெஸ்ட் போட்டிகளிலும் 2-வது இன்னிங்ஸில் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றுள்ளது. லார்ட்ஸில் நடந்த போட்டியிலும், ஓவலில் நடந்த ஆட்டத்திலும் 2-வது இன்னிங்ஸில் டெய்ல்என்டர்கள் பேட்ஸ்மேன்கள் சிறந்த பங்களிப்பு செய்துள்ளனர்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி செய்ததவறுகள் குறித்து முன்னால் கேப்டன் சுனில் கவாஸ்கர் சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

மான்செஸ்டரில் நடக்கும் 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட்டுக்கு அதிகமான அழுத்தம் இருக்கும். ஏனென்றால், இந்தியா தற்போது 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருப்பது மனோரீதியாக பெரிய வலிமையாக இருக்கும். இங்கிலாந்து அணியும், இங்கிலாந்து ஊடகங்களும் இப்போதே ஆஷஸ் தொடரைப் பற்றி பேசத் தொடங்கிவிட்டார்கள், அந்தத் தொடரில் எவ்வாறு விளையாட வேண்டும் என்று பேசுகிறார்கள்.

ஆனால், இங்கிலாந்து அணி 5-வது டெஸ்டில்தான் கவனம் செலுத்த வேண்டும், இந்திய அணியின் சவால்களைப் பேச வேண்டும். இந்திய அணியை இங்கிலாந்துஅணிகுறைத்து மதிப்பிட்டுவிட்டது. அதற்கான விலையை இந்தத் தொடரி்ல் வெல்லாவிட்டால் வழங்குவார்கள்.

ஓவல் டெஸ்டில் இ்ந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 380 ரன்கள் மட்டும் சேர்த்திருந்தால், இங்கிலாந்து அணிக்கு 280 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கும். எளிதாக சேஸிங் செய்திருப்பார்கள்.
ஆனால், 368ரன்கள் இலக்கு இங்கிலாந்து அணிக்கு பெரியஅழுதத்தைக் கொடுத்தது. இந்திய அணியின் டெய்ல்என்டர்கள் பேட்ஸ்மேன்கள் தாக்கூர், ஷமி, பும்ரா, ஆகியோர் பேட்டிங்கிலும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்கள்.

பந்துவீச்சாளர்களும் கடைசி நேரத்தில் ரன் அடிக்கும் போது, உண்மையில் அணியின் நம்பிக்கை உயரத்துக்குச் செல்லும் அவர்கள் பந்துவீச வரும்போது உற்சாகமாகப் பந்துவீசுவார்கள். இந்தியஅணி 50 ஆண்டுகளுக்குப்பின் ஓவல் மைதானத்தில் வென்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது

இவ்வாறு கவாஸ்கர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x