

6வது டி 20 உலகோப்பை தொடர் அடுத்த மாதம் 8ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இந்த தொடரின் ஒரு அரையி றுதி ஆட்டம் உட்பட நான்கு போட்டிகள் டெல்லி கிரிக்கெட் சங்க கட்டுப்பாட்டில் உள்ள பெரோஷா கோட்லா மைதா னத்தில் நடைபெறும் என அறி விக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் போட்டிகளை நடத்துவதற்கான தடையில்லா சான்றிதழை டெல்லி மாநகராட் சியிடம் இருந்து கிரிக்கெட் சங்கத்தால் பெறமுடியவில்லை. கடந்த மாதம் 31ம் தேதிக்குள் தடையில்லா சான்றிதழை பெற்று தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என டெல்லி கிரிக் கெட் சங்கத்துக்கு பிசிசிஐ காலக்கெடு விதித்திருந்தது.
இந்த காலக்கெடு முடிவ டைந்துள்ள நிலையில் மேலும் வரும் 10ம் தேதி வரை காலஅவ காசத்தை நீட்டிக்குமாறு டெல்லி கிரிக்கெட் சங்கம் கோரியது. இதற்கிடையே இதுதொடர்பான தகவல்களை பிசிசிஐ செயலா ளர் அனுராக் தாகூர் ஐசிசி-க்கு தெரிவித்துள்ளார். இதனால் திட்டமிட்டப்படி உலககோப்பை போட்டிகள் டெல்லியில் நடைபெறுமா என்பதில் சந்தே கம் எழுந்துள்ளது.
ஒருவேளை பெரோஷா கோட்லா மைதானம் போட்டியை நடத்தும் வாய்ப்பை இழந்தால் இங்கு நடத்த திட்டமிடப்பட்டி ருந்த ஆட்டங்கள் பெங்களூர், சென்னை, தர்மசாலா, கொல் கத்தா, மும்பை, மொகாலி, நாக்பூர் ஆகிய இடங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.
இதற்கிடையே ஐசிசி கூட்டம் துபையில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பிசிசிஐ தலைவர் ஷசாங் மனோகர், அனுராக் தாகூர் பங்கேற்றுள் ளனர். இந்த கூட்டத்தில் பெரோஷா கோட்லா மைதானம் தொடர்பாக விவாதிக்கப்படக் கூடும் என தெரிகிறது. இந்த வார இறுதியில் ஐசிசி தனது நிலையை அறிவிக்கக்கூடும் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன.
தடையில்லா சான்றிதழ் விவகாரத்தால் வரும் 12ம் தேதி டெல்லியில் நடைபெற இருந்த இந்தியா-இலங்கை அணிகள் இடையேயான இருதரப்பு தொடரின் இரண்டாவது ஆட்டம் ராஞ்சிக்கு மாற்றப்பட்டது குறிப் பிடத்தக்கது.