

ரஞ்சி கோப்பை காலிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கியது. சவுராஸ்டிராவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் 50.4 ஓவரில் 151 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஜாபர் 41 ரன் எடுத்தார். சவுராஸ்டிரா தரப்பில் ஜெய் தேவ் உனத்கட் 5 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து ஆடிய சவுராஸ்டிரா நேற்றைய முதல் நாள் ஆட்டம் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்தது.
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அஸாம் அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 88 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது. தாஸ் 46, அமித் வர்மா 42 ரன் எடுத்தனர். பெங்கால் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மத்திய பிரதேச அணி முதல் நாள் ஆட்டத்தில் 87 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் சேர்த்தது. ஜார்க்கண்ட் அணிக்கு எதிராக முதல் நாளில் மும்பை அணி 90 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் குவித்தது. ஹெர்வாத்ஹர் 107 ரன்கள் எடுத்தார்.