19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பை- அரையிறுதியில் வங்கதேசம்: இந்தியா - நமீபியா இன்று மோதல்

19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பை- அரையிறுதியில் வங்கதேசம்: இந்தியா - நமீபியா இன்று மோதல்
Updated on
1 min read

19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பை காலிறுதி ஆட்டம் ஒன்றில் வங்கதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நேபாள அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. 2-வது கால் இறுதியில் இந்தியா - நமீபியா இன்று மோதுகின்றன.

மிர்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நேபாள அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரிஜால் 80 பந்தில், 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 72 ரன் எடுத்தார். வங்கதேசம் தரப்பில் முகமது சைபுதின் 2 விக்கெட் கைப்பற்றினார்.

212 ரன்கள் இலக்குடன் விளையாடிய வங்கதேச அணி 48.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பினாக் கோஷ் 32, சைப் ஹஸன் 5, ஜாய்ராஸ் ஷெய்க் 38, நஸ்முல் ஹோஸைன் ஷான்டோ 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜாகீர் ஹஸன் 77 பந்தில், 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 75 ரன்னும், கேப்டன் ஹஸன் மிராஸ் 55 ரன்னும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நேபாளம் தரப்பில் தமலா 2 விக்கெட் கைப்பற்றினார். ஆட்ட நாயகனாக ஹஸன் மிராஸ் தேர்வானார். 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, நமீபியாவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் காலை 8.30 மணிக்கு பதுல்லாவில் நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in