

டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலுவின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், அவரை சக இந்திய வீரர் சந்தீப் சவுத்ரி முதுகில் தூக்கிக்கொண்டு செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.
டோக்கியோவில் நடந்துவரும் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றார்.
2015-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் (டி 63) பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்று தேசத்துக்குப் பெருமை சேர்த்த தமிழக வீரர் தங்கவேலு, இந்த முறை வெள்ளி வென்றுள்ளார். பாராலிம்பிக்கில் தங்கவேலு வெல்லும் 2-வது பதக்கம் இதுவாகும்.
வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் சக இந்திய வீரர் சந்தீப் சவுத்ரி, தங்கவேலுவைத் தனது முதுகில் தூக்கிக்கொண்டு சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.