

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் சீனாவின் பென் சுயாய், தைவானின் ஹெசி சு-வீய் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது.
சர்வதேச மகளிர் இரட்டையர் தரவரிசையில் இந்த ஜோடி முதலிடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பென் – வீய் ஜோடி, இத்தாலியின் சாரா எர்ரானி – ராபர்டோ வின்சி ஜோடியை எதிர்கொண்டது. இதில் 6-4,6-1 என்ற நேர் செட்களில் மிக எளிதாக பென் – வீய் இணை வெற்றி பெற்றது. இதில் 2-வது செட்டில் தொடர்ந்து 6 கேம்களை கைப்பற்றி பென் - வீய் ஜோடி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
இந்த ஜோடி கடந்த ஆண்டு விம்பிள்டன் மற்றும் டபிள்யூசிஏ சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் பட்டம் வென்றது என்பது நினைவுகூரத்தக்கது. டென்னிஸ் தரவரிசையில் முதல்முறையாக முதலிடம் பிடித்த சீன வீராங்கனை பென். பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நடைபெற்று வந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி நேற்றுடன் முடிவடைந்தது.-ஏ.எப்.பி.