

யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து செரீனா வில்லியம்ஸ் விலகினார். காயம் காரணமாக அவர் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
டென்னின் உலகத்தர வரிசைப் பட்டியலில் செரீனா வில்லியம்ஸ் முதலிடத்தில் உள்ளார். அவர் இதுவரை 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். யு.எஸ். ஓபன், ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன், பிரெஞ்சு ஓபன் ஆகிய நான்கு டென்னிஸ் தொடர்களை உள்ளடக்கியது தான் கிராண்ட்ஸ்லாம். இதில் கடைசியாக நடாத்தப்படும் கிராண்ட்ஸ்லாம் போட்டி யு.எஸ். ஓபன் அல்லது அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி.
இந்நிலையில், யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகுவதாக செரீனா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எனது மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் அறிவுரையை கவனமாக பரிசீலித்தப் பின்னர் நான் யு.எஸ். ஓபன் டென்னிஸ் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். எனது உடல் முழுமையாக குணமாக நான் அனுமதிக்க வேண்டும். உலகிலேயே நான் விளையாட எனக்கு மிகவும் பிடித்த இடம், உற்சாகம் தரும் நகரம் நியூயார்க். அங்கு எனது ரசிகர்களைப் பார்ப்பதை நான் இழந்துள்ளேன். ஆனாலும், தூரத்திலிருந்து அனைவரையும் உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பேன். தங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. நான் உங்களை விரைவில் மீண்டும் சந்திப்பேன் என்று பதிவிட்டுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியிலும் செரீனா வில்லியம்ஸ் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டி வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தப் போட்டியிலிருந்து ஏற்கெனவே ரோஜர் ஃபெடரர், நடால், டொமினி தீம் ஆகியோரும் காயம் காரணமாக விலகியுள்ளனர்.