இளையோர் மல்யுத்த போட்டியில் 11 பதக்கம்: இந்தியா அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இளையோர் மல்யுத்த போட்டியில் 11 பதக்கம்: இந்தியா அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Updated on
1 min read

சர்வதேச இளையோர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சர்வதேச இளையோர் மல்யுத்த சாம்பியன்ஷிப் 2021 போட்டிகளில், பதக்கங்கள் வென்ற மல்யுத்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

‘‘திறமை மிகு மல்யுத்த வீரர்களின் வலு கூடியுள்ளது. சர்வதேச இளையோர் மல்யுத்த சாம்பியன்ஷிப் 2021 போட்டிகளில், நமது இரு பாலர் அணிகளும் 4 வெள்ளி உட்பட 11 பதக்கங்களை வென்றுள்ளனர். வெற்றி பெற்ற அணிக்கு பாராட்டுக்கள். அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.’’ என குறிப்பிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in