தெற்காசிய விளையாட்டு போட்டி: இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்கிறது

தெற்காசிய விளையாட்டு போட்டி: இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்கிறது
Updated on
2 min read

தெற்காசிய விளையாட்டுப் போட்டி யில் இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்கிறது. பதக்கப் பட்டியலில் 28 தங்கப் பதக்கங்களுடன் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.

12வது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் குவாஹாட்டி மற்றும் ஷில்லாங்கில் நடைபெற்று வருகின்றன. தெற்காசிய நாடுகள் கலந்துகொள்ளும் இப்போட்டியில் இந்திய அணி தொடர்ந்து பதக்கங்களை வென்று வருகிறது.

பளுதூக்கும் போட்டி

பளுதூக்கும் போட்டியில் இந் தியா நேற்று 3 தங்கப் பதக்கங்களை வென்றது. பெண்களுக்கான 58 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சரஸ்வதி ராவத் மொத்தம் 187 கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இப்போட்டியில் வங்கதேச வீராங்கனை புலாப்டி சக்மா வெள்ளிப் பதக்கத்தையும், இலங்கை வீராங்கனை மொஹிதீன் உமேரியா வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

ஆண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சம்போ லபாங் 281 கிலோ எடை யைத் தூக்கி தங்கம் வென்றார். இப்போட்டியில் இலங்கை வீரர் திஸநாயகே வெள்ளிப் பதக்கத்தை யும், பாகிஸ்தான் வீரர் சுபியான் அபு வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.

மற்றொரு இந்திய வீரரான அஜய் சிங் 77 கிலோ கிராம் எடைப்பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். அவர் மொத்தம் 305 கிலோ எடையைத் தூக்கினார்.

மல்யுத்தப் பிரிவில் இந்திய அணி நேற்று 4 தங்கப் பதக்கங்களை வென்றது. ஆண்களுக்கான 70 கிலோ ப்ரீஸ்டைல் பிரிவில் அமித் தங்கரும், 61 கிலோ ப்ரீஸ்டைல் பிரிவில் பிரதீப்பும் தங்கம் வென்ற னர். பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவில் நடந்த மல்யுத்த போட்டியில் மம்தாவும், 58 கிலோ எடைப்பிரிவில் மஞ்சு குமாரியும் தங்கப் பதக்கம் வென்றனர்.

பெண்களுக்கான 40 கிலோ மீட்டர் தூர சைக்கிளிங் போட்டியில் இந்தியாவின் லிடியமோள் சன்னி தங்கப் பதக்கத்தையும், மனோரமா தேவி வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். இப்போட்டியில் இலங்கை வீராங்கனை சுதரிகா பிரியதர்ஷினி வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஆண்களுக்கான 60 கிலோமீட்டர் தூர சைக்கிளிங் போட்டியில் இந்தியாவின் பங்கஜ் குமாருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இப்போட்டியில் இலங்கை வீரர்கள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களைக் கைப்பற்றினர்.

ஸ்குவாஷ்

பெண்களுக்கான ஸ்குவாஷ் போட்டியில் நேற்று நடந்த அரை யிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங் கனை ஜோஷ்னா சின்னப்பா 11-9, 11-7, 11-5 என்ற செட்கணக்கில் பாகிஸ் தானின் சாடியா குல்லை தோற் கடித்து இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார்.

ஷில்லாங்கில் நடந்த பெண்களுக்கான உஷூ போட்டியில் இந்திய வீராங்கனை சப்னா தேவி தங்கப் பதக்கத்தையும், ஆண்களுக் கான உஷூ போட்டியில் இந்திய வீரர் அஞ்சுல் நாம்தியோ வெண் கலப் பதக்கத்தையும் வென்றனர்.

வில்வித்தை போட்டிகளிலும் இந்திய அணி நேற்று ஆதிக்கம் செலுத்தியது. காம்பவுண்ட் மற்றும் ரிகர்வ் பிரிவு போட்டிகளில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்த னர்.

ஹாக்கி

பெண்களுக்கான பிரிவில் நேற்று நடந்த ஹாக்கி போட்டியில் இந்திய அணி நேபாளத்தை 24-0 என்ற கோல்கணக்கில் அபாரமாக வென்றது. இந்திய அணியின் சார்பில் சவுந்தர்யா, பூனம் பார்லா ஆகியோர் தலா 4 கோல்களை அடித் தனர். ராணி, ஜஸ்பிரீத் கவுர், நேஹா கோயல், தீபிகா ஆகியோர் நேற்றைய ஆட்டத்தில் தலா 3 கோல் களை அடித்தனர். அடுத்த லீக் போட்டியில் இந்திய அணி இலங் கையை எதிர்கொள்ள உள்ளது.

நீச்சல் போட்டி

நீச்சல் போட்டியில் இந்தியா நேற்று 4 தங்கப் பதக்கங்கள் உட்பட 10 பதக்கங்களை வென்றது. ஆண்களுக்கான 1500 மீட்டர் ப்ரீ ஸ்டைல் போட்டியில் இந்திய வீரர் சாஜன் பிரகாஷும், 200 மீட்டர் பிரஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் சேஜ்வாலும், 200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவில் மன்னா படேலும் தங்கம் வென்றனர். பெண்களுக்கான 400 மீட்டர் மெட்லியில் இந்திய வீராங்கனை சயானி கோஷ் தங்கம் வென்றார்.

இந்திய அணி நேற்று மாலை பதக்கப் பட்டியலில் 28 தங்கம், 12 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கத்துடன் முதலிடத்தில் இருந் தது. 8 தங்கம், 17 வெள்ளி மற்றும் 13 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று இலங்கை அணி 2-வது இடத்தில் இருந்தது. பாகிஸ்தான் அணி 3-வது இடத்தில் உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in