

வங்கதேசத்திற்கு எதிராக நாளை தொடங்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை ஸ்டார் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்வதாக ஆகாஷ் சோப்ரா ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
இந்த ஒருநாள் தொடருக்கான ஒளிபரப்பு உரிமையை காஸி டிவி வாங்கியிருந்தது. ஆனால் இந்தியாவில் இந்தத் தொடரை நேரடி ஒளிபரப்பு செய்ய ஒருவரும் முன்வரவில்லை.
காரணம் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் ஆக்ரம்பிப்பு. மேலும் ஸ்டார் தொலைக்காட்சி நிறுவனம் குறைந்த தொகைக்கு ஒளிபரப்பு உரிமையை கேட்டதாக காஸி தொலைக்காட்சி நிர்வாகி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த ஒருநாள் போட்டிகள் ஸ்டார் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று ஆகாஷ் சோப்ரா தனது ட்விட்டரில் பதிவு செய்திருந்தார்.
ஆனால் பின்பு இந்தப் பதிவை அவர் நீக்கிவிட்டிருந்தார்.