

ஆசிய கோப்பை டி 20 தொடர் மற்றும் ஐசிசி டி 20 உலககோப்பைக்கான இந்திய அணி தேர்வு நாளை (பிப்.5ம் தேதி) நடைபெறுகிறது.
தேர்வுக்குழு தலைவர் சந்திப்பாட்டீல் தலைமையிலான குழுவினர் டெல்லியில் நாளை அணியை தேர்வு உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்திய அணி இலங்கைக்கு எதிராக மூன்று டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் மோத உள்ளது. இதன் முதல் ஆட்டம் வரும் 9ம் தேதி புனேவில் நடக்கிறது.
இதைத்தொடர்ந்து ஆசிய கோப்பை டி 20 தொடரில் இந்திய அணி கலந்துகொள்கிறது. 5 நாடுகள் கலந்துகொள்ளும் ஆசிய கோப்பை டி 20 தொடர் பிப்ரவரி 24ம் தேதி முதல் மார்ச் 6ம் தேதி வரை வங்கதேசத்தில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் தகுதி சுற்றில் வெற்றி பெறும் ஒரு அணியும் கலந்துகொள்கிறது.
ஆசிய கோப்பையில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை 24ம் தேதியும், 27ம் தேதி பாகிஸ்தானையும், மார்ச் 1ல் இலங்கையையும், கடைசி ஆட்டத்தில், தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் 3ம் தேதியும் மோதுகிறது.
ஆசிய கோப்பை தொடர் டி 20 வடிவில் நடத்தப்படுவது இதுவே முதன்முறை. வழக்கமாக 50 ஓவர்களை கொண்ட போட்டியாகவே நடத்தப்படும். இம்முறை டி 20 உலககோப்பையை கருத்தில் கொண்டு தொடரின் வடிவம் மாற்றப்பட்டுள்ளது.
உலககோப்பை டி 20 தொடர் மார்ச் 8ம் தேதி தொடங்குகிறது. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் 15ம் தேதி நியூஸிலாந்தை எதிர்த்து விளையாடுகிறது. இந்த ஆட்டம் நாக்பூரில் நடைபெறுகிறது.
உலககோப்பை டி 20 தொடர் மார்ச் 8ம் தேதி தொடங்குகிறது. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் 15ம் தேதி நியூஸிலாந்தை எதிர்த்து விளையாடுகிறது.