ஒலிம்பிக் ஹாக்கி: இந்திய மகளிர் அணி போராடி தோல்வி; மைதானத்திலேயே அழுத கோல்கீப்பர்

ஒலிம்பிக் ஹாக்கி: இந்திய மகளிர் அணி போராடி தோல்வி; மைதானத்திலேயே அழுத கோல்கீப்பர்
Updated on
1 min read

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி போராடி தோல்வி அடைந்தது.

32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இதில் ராணி ராம்பால் தலைமையிலான இந்திய மகளிர் ஆக்கி அணி, முதல் 3 ஆட்டங்களில் தோல்வியை தழுவியது. அதன்பின்னர் அடுத்தடுத்து 2 வெற்றிகளை பதிவு செய்து காலிறுதிக்கு முன்னேறியது.

காலிறுதியில், பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அரை இறுதிக்கு நுழைந்து சாதனை படைத்தது.

ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய மகளிர் ஹாக்கி அணி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறி இருந்தது.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அரையிறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அர்ஜென்டினாவை இந்தியா எதிர்கொண்டது. கடைசிவரை விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா 1-2 என தோல்வியடைந்தது.

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. இதில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி 3-4 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியிடம் கடுமையாக போராடி தோல்வி அடைந்தது.

ஒரு கட்டத்தில் 0-2 என்று பிரிட்டனிடம் பின் தங்கி பிறகு 3-2 என்று முன்னிலை பெற்றிருந்தது.இங்கிலாந்து முதல் கோல் இந்திய அணியின் சேம்சைடு கோலாக மாறியதும் பின்னடைவை ஏற்படுத்தியது.

ஒரு கட்டத்தில் இரு அணிகளும் தலா 3 கோல்கள் அடித்து இருந்ததால் கூடுதலாக கோல் அடித்து முன்னிலை பெற தொடக்கம் முதலே போராடின. இங்கிலாந்து அணி மூன்றாவது நிமிடத்தில் தங்களுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோல் ஆக மாற்றியது.

இதனால், இங்கிலாந்து 4-3 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டன. இறுதி நிமிடங்களில் இங்கிலாந்து அணி தடுப்பாட்டம் ஆடியது. இறுதியில் 4-3 என்ற கோல் கணக்கில் பிரிட்டன் வெற்றி பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து அணி வெண்கலப் பதக்கம் வென்றது.

இந்திய கோல் கீப்பர் சவிதா புனியா உள்ளிட்ட வீராங்கனைகள் மைதானத்திலேயே அழுதனர். ஒலிம்பிக்கில் முதல் முறையாக இந்திய மகளிர் அணி பதக்கம் வெல்லும் என எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றம் அடைந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in