

மகளிர் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் 41 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற இந்தியாவின் சானியா மிர்சா, ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியில் தோல்வியை சந்தித் தது. இதனால் இந்த ஜோடியின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.
நம்பர் ஒன் ஜோடியான சானியா, ஹிங்கிஸ் காலிறுதி சுற்றில் 6-2, 4-6, 5-10 என்ற கணக்கில் ரஷ்யாவின் எலினா வெஸ்னினா, தரியா கஸட்ஹினா ஜோடியிடம் தோல்வியடைந்தது.