Last Updated : 05 Aug, 2021 09:20 AM

 

Published : 05 Aug 2021 09:20 AM
Last Updated : 05 Aug 2021 09:20 AM

41 ஆண்டுகால தவிப்பு: சபாஷ்…ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது: ஜெர்மனி முயற்சி பலிக்கவில்லை


ஒலிம்பி்க்கில் 41 ஆண்டுகளுக்குப்பின் இந்திய ஆடவர் ஹாக்கி அணி முதல்முறையாக பதக்கம் வென்றுள்ளது.

டோக்கியோவில் இன்று நடந்த ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியி்ன் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஜெர்மனி அணியை 4-5 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.

ஒலிம்பிக் ஹாக்கியில் ஒருகாலத்தில் சிங்கமாக வலம் வந்த இந்திய அணி 8 தங்கம் உள்ளிட்ட 11 பதக்கங்களை வென்றுள்ளது. கடைசியாக 1980-ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றது. அதன்பின் 41 ஆண்டுகளாக ஒலிம்பிக்கில் பங்கேற்றுவரும் இந்திய ஆடவர் ஹாக்கி அணியால் ஒரு பதக்கத்தைக் கூட வெல்ல முடியவில்லை.

ஆனால், தற்போது 41 ஆண்டுகளுக்குப்பின் முதல்முறையாக வெண்கலத்தை இந்திய அணி கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது. 49 ஆண்டுகளுக்குப் பின் இந்த முறை அரையிறுதிக்குத் தகுதி பெற்ற இந்திய அணி பதக்கத்தோடு நாடு திரும்புகிறது.

இந்திய அணித்தரப்பில் சிம்ரன்ஜித்சிங்(17,34-வது நிமிடம்)2 கோல்கள் அடித்தார், ஹர்திக் சிங்(27-வதுநிமிடம்), ஹர்மன்பிரீத் சிங்(29-வதுநிமிடம்), ரூபேந்திர பால்சிங்(31-வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்தனர்.

ஜெர்மனி தரப்பில் திமுர் ஒர்ஸ்(2வதுநிமிடம்), நிக்லாஸ் வெலன்(24-வதுநிமிடம்), பெனடிக் பர்க்(25-வதுநிமிடம்),லூகாஸ் விண்ட்பீடர்(48-வது நிமிடம்)

ஆட்டன் முதல் கால்பகுதி மட்டுமே ஜெர்மனி அணி வசம் இருந்தது. மற்ற 3 கால்பகுதி ஆட்டங்களிலும் இந்திய வீரர்களின் ஆதிக்கமே இருந்தது. அதிலும் 2-வது கால்பகுதியில் அடுத்தடுத்து கோல்களைஅடித்து இந்திய அணியினர் அசத்தினர். 3-வது கால்பகுதியிலும் ராஜ்ஜியம் நடத்திய இந்திய வீரர்கள் 2 கோல்களை அடித்து ஜெர்மனிக்கு கடுமையான அழுத்தம் கொடுத்தம் கொடுத்தனர்.

இதிலிருந்து ஜெர்மனி அணியால் மீண்டுவரமுடியாமல் பலதவறுகளைச் செய்தனர். மைண்ட் கேம் ஆடிய இந்திய அணியின் ஆட்டத்தைப் புரிந்து கொள்ள முடியாமல், ஜெர்மனி வீரர்கள் அடுத்தடுத்து இழைத்த தவறு இந்திய அணிக்கு சாதகமாக முடிந்தது. கடைசிக் காலிறுதியில் கோல் அடிப்பதில் முக்கியத்துவம் செலுத்தாமல், தடுப்பாட்டத்தைக் கையாண்டு சுவர்போன்று எழும்பி அணியை நெருக்கடி கட்டத்துக்குச் செல்வதிலிருந்து இந்திய அணியினர் காத்தணர்.

ஆட்டம் தொடங்கியதிலிருந்தே இரு அணியினரும் பரபரப்பாகச் செயல்பட்டனர். ஆட்டத்தின் 2-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் திமுர் குருஸ் முதல் கோல் அடித்து இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தார். ஆட்டத்தின் 4-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் கான்ஸ்டான்டன் ஸ்டாயிப்புக்கு க்ரீன் கார்டு அளித்தார் நடுவர் இதனால், 10 வீரர்களுடன் ஜெர்மனி ஆடியது. ஆட்டத்தின் 12 மற்றும் 15-வது நிமிடத்தில் ஜெர்மனி அணிக்கு கோல் அடிக்க வாய்ப்புக் கிடைத்தும் அதை தவறவிட்டனர். இதனால் முதல் கால்பகுதி முடிவில் 1-0 என்ற கணக்கில் ஜெர்மனி முன்னிலையில் இருந்தது.

2-வது கால்பகுதி ஆட்டம் தொடங்கியதும், 17-வது நிமிடத்தில் இந்திய அணி வீரர் நிலாகந்தா சர்மா அளித்த பாஸை அருமையான கோலாக சிம்ரன்ஜித் சிங் மாற்றினார். இதனால் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும்சமநிலையில் இருந்தனர்.

ஆட்டத்தின் 24-வது நிமிடத்தில் இந்திய வீரர் நிலாகந்தா சர்மா பந்தை கடத்திச்சென்றபோது அவரிடம் இருந்து பறித்த ஜெர்மனி வீரர்கள் கோலுக்குக் கடத்தினர். ஜெர்மனி வீரர் கிறிஸ்டோபர் பந்தை சகவீரர் நிக்லாஸ் வெலனுக்கு பாஸ் செய்யவே அருமையான கோலாக்கினார். இதனால் 2-1 என்ற கோல்கணக்கில் ஜெர்மனி முன்னிலை பெற்றது.

25-வது நிமிடத்தில் இந்திய வீரர் சுரேந்திர குமார் செய்த தவறால், பந்தை ஜெர்மனி வீரர் பெனடிக் பர்க் பறித்துச் சென்று கோலாக்கினார். இதனால் 3-1 என்ற கோல்கணக்கில் ஜெர்மனி முன்னிலை பெற்றது.
27-வது நிமிடத்தில் இந்திய அணி பதிலடி கொடுத்தது. பெனால்டி கார்னர் வாய்ப்பை ரூபேந்திர சிங் அடிக்க, அதை சிம்ரன்ஜித் சிங் கோலாக்க முயன்றார். ஆனால் பந்தை ஜெர்மன் கோல்கீப்பர் அலெக்சாண்டர் தடுக்கவே கோல் முயற்சி முயற்சி முறியடிக்கப்பட்டது.

ஆனால், சற்றும் மனம்தளராத இந்திய வீரர் ஹர்திக் சிங் கிடைத்த வாய்ப்பில் கோல் அடிக்க இந்திய அணி 2-2 என்ற கணக்கில் கோலை சமன் செய்தது.29-வது நிமிடத்தில் அடுத்த அதிரடியை இந்திய அணி வெளிப்படுத்தியது. இந்திய வீரர் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடிக்க இந்திய அணி 3-3 என்ற கணக்கில் சமன் செய்தது. ஒலிம்பிக்கில் ஹர்மன்பிரீத் சிங்தனது 6-வது கோலை அடித்தார்.


இதனால் ஆட்டத்தின் 2-வது கால்பகுதியில் இந்திய அணியும், ஜெர்மனியும் தலா 3 கோல்களுடன் சமநிலை பெற்றனர். ஆட்டமும் பரபரப்பை நோக்கி நகர்ந்தது.

3-வது கால்பகுதி நேரத்தில் 31-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டி ஸ்ட்ரோக்கை இந்திய வீரர் ரூபேந்திர பால்சிங் கோலக்கி 4-3 என்ற கணக்கில் இ்ந்திய அணியை முன்னிைலப்படுத்தினார். இதன்பின்னர் இந்தியஅணியின் மிகுந்த நம்பிக்கையுடன், ஊக்கத்துடன் விளையாடினர்.

34-வது நிமிடத்தில் அடுத்த அடியை ஜெர்மனி தலையில் இந்திய அணியினர் இறக்கினர். குர்ரன்த் சிங்கிடம் கிடைத்த பாஸை லாகமாகக் கடத்திச் சென்று சிம்ரன்ஜித் சிங் கோலாக்க இந்திய அணி 5-3 என்ற கணக்கில் அபார முன்னிலை பெற்றது.அதன்பின இந்திய அணியினர் தடுப்பாட்டத்தைக் கையாண்டதால் ஜெர்மனி அணியினரால் கோல் அடிக்க முடியவில்லை.

3-வது கால்பகுதி ஆட்டமும் இந்தியஅணிக்கு சாதகமாக அமைந்து 5-3 என்ற கோல்கணக்கில் முன்னிலை பெற்றது. 4-வது மற்றும் கடைசிக் கால்பகுதி ஆட்டம் தொடங்கியது, 49வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் லூகாஸ் கோல் அடிக்க 4-5 என்ற கணக்கில் ஜெர்மனி முன்னேறியது. ஆனால், சூழலைப் புரிந்துகொண்ட இந்தியஅணியினர் மேற்கொண்டு எந்த கோலையும் ஜெர்மனி வீரர்கள் அடிக்க விடாமல் தடுப்பாட்டைத்தைக் கையாண்டனர்.

50-வது நிமிடத்தில் ஜெர்மனியின் கேப்டன் டோபியாஸுக்கு நடுவர் மஞ்சள் அட்டை வழங்க ஜெர்மனிக்கு பின்னடைவாக அமைந்தது. 54-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னரை ஜெர்மனி அணியினர் கோலாக முயன்றபோது இந்திய கோல்கீப்பர் சுவர் ஸ்ரீஜேஷ் தடுத்து அணியைக் காத்தார். ஆட்டம் முடியும் கடைசி நிமிடத்திலும் ஜெர்மனி வீரர்கள்அடித்த கோல் வாய்ப்பையும் கோல்கீப்பர் ஸ்ரீஜேஸ் தடுத்து இ்ந்திய அணியைக் காத்தார். ஆட்டநேர முடிவில் ஜெர்மனியை 4-5 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x