12-வது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவு: 181 தங்கம் உட்பட 298 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம்

12-வது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவு: 181 தங்கம் உட்பட 298 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம்
Updated on
2 min read

குவாஹாட்டி மற்றும் ஷில்லாங்கில் நடைபெற்று வரும் 12வது தெற்காசிய விளையாட்டு போட்டி கள் இன்றுடன் நிறைவடைகிறது. நேற்று நடைபெற்ற மகளிருக்கான கால்பந்து, ஹேண்ட் பால் போட்டியில் இந்தியா தங்க பதக்கம் வென்றது.

குத்துச்சண்டையில் 7 பிரிவு களில் நடைபெற்ற போட்டிகளில் ஒட்டுமொத்தமாக இந்தியா தங்கம் வென்றது. அதேவேளையில் துப்பாக்கி சுடுதலில் அனைத்து பிரிவு போட்டிகளும் முடிவடைந்த நிலையில் இந்தியா மொத்தம் 25 தங்கம் கைப்பற்றியது.

மகளிருக்கான கால்பந்து போட்டியில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் நேபாள அணியை வீழ்த்தி தங்கம் வென் றது. இதேபோல் ஹேண்ட்பாலில் இந்திய மகளிர் அணி வங்க தேசத்தை வீழ்த்தி தங்கம் கைப்பற்றியது. ஜூடோவில் இந்தியாவுக்கு 7 தங்கம், ஒரு வெள்ளி பதக்கம் கிடைத்தது. கபடியில் இந்திய ஆடவர் அணி பாகிஸ்தானையும், மகளிர் அணி வங்கதேசத்தையும் வீழ்த்தி தங்கம் வென்றது.

குத்துச்சண்டை

குத்துச்சண்டையில் இந்தியாவின் தேவேந்திரா சிங் 49 கிலோ எடை பிரிவில் பாகிஸ்தானின் மோஹிப் உல்லாவை வீழ்த்தி தங்கம் வென்றார். 52 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் மதன் லால், பாகிஸ்தானின் முகமது சையத் ஆசிப்பையும், ஷிவா தபா 56 கிலோ எடை பிரிவில் இலங்கையின் ருவன் திலினாவையும், விகாஸ் கிருஷ்ணன் 75 கிலோ எடை பிரிவில் பாகிஸ்தானின் தன்வீர் அகமதுவையும், தீரஜ் ராங்கி 60 கிலோ எடை பிரிவில் பாகிஸ்தானின் முகமது அலியையும், மனோஜ் குமார் 64 கிலோ எடை பிரிவில் இலங்கையின் தினிடு ஷபராமதுவையும், மன்தீப் ஜங்ரா 69 கிலோ எடை பிரிவில் ஆப்கானிஸ்தானின் ரஹிமி அலாவையும் வீழ்த்தி தங்க பதக்கம் வென்றனர்.

துப்பாக்கி சுடுதல்

துப்பாக்கி சுடுதலில் ஆடவருக்கான 25 மீட்டர் ரேப்பிடு பையர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் குர்பிரிட் சிங் தங்கம் வென்றார். மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் சுவேதா சிங் தங்க பதக்கம் கைப்பற்றினார். இதே பிரிவில் இந்தியாவின் ஹீனா சித்து வெள்ளியும், யாஷாஸ்வினி சிங் தேஸ்வால் வெண்கலமும் கைப் பற்றினர்.

இந்த இரு போட்டியின் அணிகள் பிரிவிலும் இந்தியா தங்கம் வென்றது. நேற்றுடன் துப்பாக்கி சுடுதலில் அனைத்து போட்டிகளும் முடிவடைந்தது. இதில் மொத்தம் 26 போட்டிகளில் இந்தியா 25 தங்கம் கைப்பற்றியது. மேலும் தலா 10 வெள்ளி, 10 வெண்கல பதக்கமும் இந்தியா வுக்கு கிடைத்தது. வங்கதேசம் 1 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் கைப்பற்றியது.

298 பதக்கங்கள்

நேற்றைய நிலவரப்படி இந்தியா 181 தங்கம், 87 வெள்ளி, 30 வெண்கலத்துடன் 298 பதக் கங்களுடன் பதக்க பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகித்தது. இலங்கை 25 தங்கம், 60 வெள்ளி, 96 வெண்கலத்துடன் 181 பதக் கங்களுடன் இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தான் 10 தங்கம், 35 வெள்ளி, 55 வெண்கலத்துடன் 100 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலும் இருந்தன.

இன்றுடன் நிறைவு

கடந்த 5ம் தேதி குவாஹாட்டியில் கோலாகலமாக தொடங்கிய தெற்காசிய விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறை வடைகிறது. கடைசி நாளான இன்று தேக்வாண்டோ, ஜூடோ, குத்துச்சண்டை ஆகிய பிரிவு களில் தங்க பதக்கத்துக்கான ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் போட்டிகள் நிறைவு பெறுகிறது. நிறைவு விழா நிகழ்ச்சிகள் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி 6 மணி வரை நடைபெறுகிறது.

173 தங்கம் உட்பட 289 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்தியா கடைசி நாளான இன்று மேலும் சில பதக்கங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. குத்துச் சண்டையில் மகளிருக்கான 48-51 கிலோ எடை பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம் இன்று இலங்கையின் அனுஷாவை எதிர்கொள்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in