

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் நியூஸிலாந்து கேப்டன் பிரண்டன் மெக்கலம் 54 பந்துகளில் சதம் விளாசி 30 ஆண்டுகால சாதனையை முறிய டித்தார்.
கிறிஸ்ட்சர்ச்சில் நேற்று தொடங் கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங்கை தேர்வு செய்தார். முத லில் பேட் செய்த நியூஸிலாந்து 19.4 ஓவரில் 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. கப்தில் 18, டாம் லதாம் 4, நிக்கோல்ஸ் 7 ரன்களில் வெளியேறினர். இதை யடுத்து பிரண்டன் மெக்கலம் களம் புகுந்தார். ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். ஸ்கோர் 74 இருந்த போது வில்லியம்சன் 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.
5வது விக்கெட்டுக்கு களமிறங் கிய கோரே ஆண்டர்சன், மெக்கல முடன் இணைந்து அதிரடியாக விளையாடினார். 34 பந்தில் அரை சதம் அடித்த மெக்கலம் அடுத்த 20 பந்துகளில் சதம் விளாசினார். 16 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 54 பந்தில் சதம் விளாசி மெக்கலம் கிரிக்கெட் உலகில் குறைந்த பந்தில் சதம் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார்.
சாதனை முறியடிப்பு
இதற்கு முன்னர் 1986-ல் இங்கி லாந்துக்கு எதிராக மேற்கு இந்தி யத் தீவுகள் அணியின் விவ் ரிச்சர்ட்ஸும், 2014-ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணியின் மிஸ்பா உல் ஹக்-கும் 56 பந்துகளில் சதம் எடுத்ததே வேக மான டெஸ்ட் சதங்களாக இருந்தன. அதைத் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் முறியடித்துள்ளார் மெக்கல்லம்.
மெக்கலம் 82 ரன்னில் இருந்து 100 ரன்களை கடக்க 6 பந்துகள் மட்டுமே எடுத்துக்கொண்டார். ஜோஸ் ஹஸல்வுட் வீசிய ஓவரில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகள் விளாசி சதத்தை நிறைவு செய்தார் மெக்கலம்.
79 பந்தில், 21 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 145 ரன் விளாசிய நிலையில் பேட்டின்சன் பந்தில் மெக்கலம் ஆட்டமிழந்தார். ஸ்குயர் லெக் திசையில் அவர் அடித்த பந்தை நாதன் லியான் அற்புதமாக கேட்ச் செய்தார்.
32 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்த தவித்த நியூஸி. அணியை தனது அதிரடியால் மெக்கலம் மீட்டது சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. அவர் ஆட்டமிழந்த போது அணியின் ஸ்கோர் 45.1 ஓவரில் 253 ஆக இருந்தது. 5வது விக்கெட்டுக்கு மெக்கலம்-ஆண்டர்சன் ஜோடி 179 ரன்களை வெறும் 57 பந்துகளில் குவித்தது. இந்த ஜோடி ஓவருக்கு சராசரியாக 9.76 ரன்கள் வீதம் எடுத்தது. டெஸ்ட் போட்டிகளில் குறைந்த பந்துகளில் 100 ரன்களை சேர்த்த ஜோடியும் இதுவாக அமைந்தது.
மெக்கலம் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் கோரே ஆண்டர்சனும் வெளியேறினார். 39 பந்தில் அரை சதம் அடித்த அவர் மொத்தம் 66 பந்தில், 8 பவுண்டரிகள், 4 சிக்ஸ ருடன் 72 ரன் சேர்த்தார். வாட்லிங் 58, டிம் சவுதி 5, மேட் ஹென்றி 21, வாக்னர் 10 ரன்களில் நடையை கட்ட நியூஸிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் 65.4 ஓவரில் 370 ரன்களில் முடிவடைந்தது. டிரென்ட் பவுல்ட் 14 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆஸி. தரப்பில் நாதன் லியான் 3, ஹஸல்வுட், பேட்டின்சன், பேர்டு தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய ஆஸி. அணி நேற் றைய முதல் நாள் ஆட்டம் முடி வில் 20 ஓவரில் 1 விக்கெட் இழப் புக்கு 57 ரன்கள் எடுத்தது. வார்னர் 12 ரன்னில் பவுல்ட் பந்தில் ஆட்ட மிழந்தார்.
பர்ன்ஸ் 27, உஸ்மான் ஹவாஜா 18 ரன்களுடன் களத்தில் இருந்தனர். ஆஸி. அணி 313 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில் இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெறு கிறது.
4 ஓவரில் 57 ரன்
ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் ஹஸல்வுட் முதல் 10 ஓவரில் வெறும் 11 ரன்களே விட்டுக்கொடுத் திருந்தார். ஆனால் அடுத்த 4 ஓவரில் 57 ரன்கள் வாரி வழங் கினார். ஹஸல்வுட் வீசிய 36வது ஓவரின் கடைசி 4 பந்துகளில் மெக் கலம் முறையே 6, 4, 4, 4 ரன்கள் விளாசி சாதனை சதம் விளாசினார்.
39 ரன்னில் தப்பிய மெக்கலம்
மெக்கலம் 39 ரன்களில் இருந்த போது பேட்டின்சன் பந்தில் மிட்செல் மார்ஷிடம் கேட்ச் ஆனார். மார்ஷ் டைவ் அடித்து ஒற்றை கையால் பந்தை பிடித்தார். ஆனால் டிவி ரீப்ளேவில் இது நோபால் என தெரியவந்தது. இத னால் தப்பிப்பிழைத்த மெக்கலம் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.
சிக்ஸரிலும் சாதனை
மெக்கலம் நேற்றைய ஆட்டத்தில் டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த கில்கிறிஸ்டின் சாதனையையும் முறியடித்தார். கில்கிறிஸ்ட் 100 சிக்ஸர்கள் அடித்திருந்தார். 101 டெஸ்டில் விளையாடி உள்ள மெக்கலம் 106 சிக்ஸர்கள் இதுவரை விளாசியுள்ளார்.
சாதனை பற்றி அறியவில்லை
54 பந்தில் சதம் விளாசி சாதனை படைத்தது தொடர்பாக மெக்கலம் கூறும்போது, நான் அடித்த சதம் அதிவேக சதம் என்பது உடனடியாக எனக்கு தெரியவில்லை. மைதானத்தில் இருந்த பெரிய திரையில் பார்த்து தான் தெரிந்துகொண்டேன். ஒவ்வொரு பந்தையும் பவுண்டரி அல்லது சிக்ஸராக அடிக்க வேண்டும் என்று மட்டுமே எண்ணினேன். விவ் ரிச்சர்ட்ஸின் சாத னையை பற்றி நான் அறிந்திருக்கவில்லை.
இதற்கு முன்னர் அதிவேக சதம் அடித்து சாதனை புரிந்த அனைவரையும் மதிக்கிறேன். ரிச்சர்ட்ஸ் தான் எனது இளமை கால ஹீரோ. அவரது சாதனையை முறியடித்ததில் மகிழ்ச்சி தான். அதேசமயம் அவரைப் போன்ற ஒரு வீரரின் சாதனையைத் தாண்டியது சங்கடத்தையும் ஏற்படுத்துகிறது என்று தெரிவித்தார் மெக்கலம்.